இந்த மீம்களை மெனக்கெட்டு தயாரித்தவர்களுக்கு ஒரு ஐயோ பாவம் மற்றும் படிப்பவர்களை புன்னகைக்க வைத்த வகையில் உங்களுக்கு கிடைத்த வெற்றிக்கு பிடியுங்கள் என் வாழ்த்தையும்.
இரண்டு விஷயம்.
1) இந்த அதீத கற்பனை உங்களளவில் உண்மையெனில் பாதிக்கப்பட்டவரின் பெயரையோ புகைப்படத்தையோ பயன்படுத்துவது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்.
2) இப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என்பதை இந்த வதந்தி உருவான ஆண்டிலிருந்தே என்னிடம் விளக்கம் கேட்ட பத்திரிகைகளிடமும் நண்பர்களிடமும் சொல்லி வந்திருக்கிறேன். யாராவது ஒரே ஒருவர் - ஒரு ஒற்றை ஆள் - மேடம் என்னிடம் நீங்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறியிருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?
உண்மை இப்படி இருக்க மீண்டும் மீண்டும் என் பெயரை இழுக்கும் உங்கள் மேல் நான் அவதூறு வழக்கு போடலாம். ஆனால் எனக்கு அதைவிட அழகான வாழ்க்கை இருக்கிறது வாழ்ந்து முடிக்க. ஆகவே இந்த மீம்களை உருவாக்கி பரப்புவோரே போய் உங்க வேலையை பாருங்க என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக