வியாழன், 19 ஜூலை, 2018

அவிநாசி ..ஜாதிவெறி பெற்றோர்கள் , பணியிடை மாற்றம் செய்தவர்கள் மீது வன்கொடுமை சட்டம் ...

அவிநாசி , கவுண்டபாளைய அரசு உயர்நிலை பள்ளியில் ஜாதி வெறி பிடித்த பெற்றோர்கள் மீது  மட்டுமல்லாது அங்கு சமையலராக பணியாற்றி வந்த பாப்பம்மாளை பணியிட மாற்றம் செய்த BDO மேலும் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

Shalin Maria Lawrence : எனது அத்தைகள் இருவரும் அரசு பள்ளிகளில் சத்துணவு பொருப்பாளர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தலித்தான்.அவர்கள் கீழ் இயங்கும் சத்துணவு ஆயாக்கள் என்று அழைக்கப்படும் உணவை தயார் செய்பவர்கள் எல்லாம் தலித்துக்களே.கிட்ட தட்ட 25 வருடமாக பார்த்து வருகிறேன்.
சென்னையை பொறுத்தவரை கிராமங்கள் போல் இல்லாமல் பள்ளிகளில் மாணாக்கர்கள் அதிகம் என்பதால் வேலை பலுவும் மிக அதிகம் அவர்களுக்கு.சொச்ச சம்பளமே ஆனாலும் அவர்களின் சுறுசுறுப்பும் ,பணி சிரத்தையும் அசாதாரணமாக இருக்கும் ஆனால் அதே நேரத்தில் அநேக குழந்தைகளின் பசியை போக்கும் அவர்களுக்கு பெரிய அங்கீகாரம் எல்லாம் கிடைக்காது.

சென்னையை பொறுத்தவரை பெரும்பாலான பள்ளிகளில் பட்டியலின சத்துணவு ஊழியர்கள்தான் இருக்கிறார்கள் ஆனால் ஒரு முறை கூட சாதியை காரணம் காட்டி எந்த பிரச்னையும் வந்தது இல்லை.
ஆனால் திரும்ப திரும்ப கிராமங்களில் இந்த அவிநாசி தீண்டாமை பிரச்னையை போல் பிரச்சனைகள் அநேகம் உண்டு.
ஒரே காரணம்.
சாதியத்தின் வேர்கள் கிராமியத்தில் தான் உள்ளது.
நகரங்களில் ஜாதி பார்க்கப்பட்டாலும்,ரெட்டை குவளை முறையிலிருந்து தனி சுடுகாகாடு வரை தீண்டாமையின் கோர வடிவங்கள் உயிர்பெற்று வாழுவது கிராமங்களில் தான்.
பெரியார் சொன்னதைப்போல கிராமியங்கள் ஒழிந்தால்தான் சாதி ஒழியும்.
கிராமியங்களை ஒழித்தல் என்பது கிராமங்களுக்கு நெருப்பு வைத்து அழித்தல் அல்ல மாறாக கிராமியமும் என்கிற கட்டமைப்பை உடைக்க வேண்டும்.
நிலைமை இப்படி இருக்க கிராமியத்தை மீட்போம் என்கிற கமல் ஹாசன் போன்றோரின் கொள்கையெல்லாம் திரும்ப திரும்ப சாதிய கலாச்சாரத்தை வலுப்படுத்தவே உண்டாக்க படுகிறது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை: