![ஜான்சன் & ஜான்சன்](https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/99C1/production/_102516393_1ae4651d-30c0-4a16-ba13-4cb3a140b0fc.jpg)
மருந்துத் துறை ஜாம்பவானான ஜான்சன் & ஜான்சன், பிரபலமான தனது குழந்தைகள் பவுடருக்கு எதிராகத் தொடரப்பட்ட சுமார் 9,000 சட்ட வழக்குகளை எதிர்கொண்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பு “ஆழ்ந்த ஏமாற்றம்” தருவதாக கூறிய நிறுவனம் மேல்முறையீடு செய்யப்போவதாக கூறியிருக்கிறது.
ஆறு வாரகால விசாரணையில், பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், பல தசாப்தங்களாக குழந்தைகளுக்கான பவுடர் மற்றும் பிற பவுடர் பொருட்களைப் பயன்படுத்தியதால் கருப்பை புற்றுநோயை ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.
இந்த வழக்குத் தொடுத்த 22 பெண்களில் 6 பேர் கருப்பை புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டனர்.
தனது நிறுவனத்தின் பவுடரில் அஸ்பெஸ்டாஸ் கலந்திருப்பது ஜான்சன் & ஜான்சன், நிறுவனத்திற்கு 1970களிலேயே தெரிந்த போதிலும், அதன் அபாயங்களைப் பற்றி இந் நிறுவனம் நுகர்வோரை எச்சரிக்கத் தவறிவிட்டதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக