புதன், 20 ஜூன், 2018

குதிரையில் வந்த தலித் மணமகனை கீழே இறக்கிவிட்ட ஜாதி வெறியர்கள்!

AHMEDABAD: A Dalit groom was not allowed to ride a mare and his relatives were allegedly threatened for burning crackers during a wedding procession in Parsa village in Mansa taluka of Gandhinagar district, around 30km from state capital – Gandhinagar. The incident took place on Sunday morning at about 10am.Guj: Darbars stop Dalit groom from riding horse thumbnailChinniah Kasi : குஜராத்தில் அரங்கேறிய தீண்டாமைக் கொடுமை
குதிரையில் வந்த தலித் மணமகனை கீழே இறக்கிவிட்ட சாதி வெறியர்கள்!
அகமதாபாத், ஜூன் 19 -
திருமணத்தன்று மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியின்போது, குதிரையில் பவனி வந்த தலித் மணமகனை, சாதி வெறியர்கள் கீழே இறக்கி விட்டு அவமானப்படுத்திய சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள பர்சா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் சோலங்கி (27). இவர் அங்குள்ள பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் வர்ஷா என்பவருக்கும் திரு மணம் நிச்சயிக்கப்பட்டது. சுமார் 2 லட்சம் ரூபாய் செலவில் இவர்களின் திரு மணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், திரு மணத்தன்று மாப்பிள்ளை அழைப்பாக பிரசாந்த் தனது வீட்டிலிருந்து மணப்பெண் வீட்டுக்கு காரில் சென்றார். பின்னர், அங்கி ருந்து திருமணம் நடக்கும் இடத்துக்கு செல்ல அவர்களது உறவினர்கள் அலங் கரிக்கப்பட்ட குதிரை ஒன்றை ஏற்பாடு செய்து, மணமகன் பிரசாந்தை அதில் ஏற்றி யுள்ளனர். அவரும் மகிழ்ச்சி யுடன் குதிரையில் பவனி வந்துள்ளார்.
அப்போது வழியில், சாதி ஆதிக்கப் பிரிவைச் சேர்ந்தஒரு கும்பல், தலித் பிரிவைச் சேர்ந்த பிரசாந்த் எப்படி குதிரையில் வரலாம் என்று கேட்டுத் தகராறு செய்து, பிரசாந்த்தை குதிரையில் இருந்து இறக்கி விட்டு அவமானப்படுத்தியுள்ளனர். மணமேடைக்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருந்த பிரசாந்த், சாதி வெறியர்களின் இந்த அராஜகத்தால் மிகவும் மனமுடைந்து போனார். பின்னர் ஒருவழியாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.இந்நிலையில், தலித் மணமகனை குதிரை யிலிருந்து இறக்கி விட்டசம்பவத்திற்கு கடும்கண்டனங்கள் எழுந்துள் ளன.இதே குஜராத்தில், சில மாதங்களுக்கு முன்பும் இதேபோல, குதிரையில் சென்றதற்காக பிரதீப் ரத்தோட் என்ற தலித் சிறுவனை சாதிவெறியர்கள் படுகொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: