சனி, 23 ஜூன், 2018

எட்டு வழிச்சாலை: ஆயிரத்துக்கு மேற்பட்ட திமுகவினர் , ஸ்டாலின் கைது.. ஆர்ப்பாட்டம் செய்த திராவிட முன்னேற்ற கழக ..

ஆளுநர் மாளிகை முற்றுகை - தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைதுBBC :எட்டு வழிசாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் தி,மு,க.வினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யபட்டனர்.
சேலம்-சென்னை இடையில் பசுமை வழிசாலை அமைக்கும் திட்டம் மற்றும் விமான நிலைய விரிவாக்க திட்டம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகம் எதிரில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தபட்டது. தி.மு.க. துணை பொது செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஏர் கலப்பை பூட்டிய மாடுகள் மற்றும் விளைபொருட்களுடன் விவசாயிகள் சிலர் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்பாட்டத்தின் போது பேசிய சுப்புலட்சுமி ஜெகதீசன், தமிழகத்தில் மதுரவாயல் துறைமுக சாலை திட்டம் உள்பட கிடப்பில் போடப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசு முன்வராதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், பொருளாதார வளர்ச்சி தரும் சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றினால் தி.மு.க. பாராட்டும் என்றும் தெரிவித்தார்.e>இதனிடையே, சென்னையில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க.வினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை , பெரியார் மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

சென்னை:

தமிழக ஆளுநர் பன்வாரிலால்  புரோகித் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து அவர் காரில் சென்றபோது, அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக எம்.எல்.ஏ. கே.எஸ்.மூர்த்தி உள்ளிட்ட 293 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கைது நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், வாகை சந்திரசேகர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் பேரணியாகச் சென்று முற்றுகையிட முயன்றனர். இதனால் அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.



அப்போது பேசிய ஸ்டாலின், மாநில சுயாட்சிக்கு எதிராக செயல்பட்டு வருதால் ஆளுநருக்கு  தொடர்ந்து திமுக கண்டனத்தை தெரிவித்து வருவதாக தெரிவித்தார். அறவழியில் போராடிய தி.மு.க.வினர் திடீரென கைது செய்யப்பட்டதைக் கண்டிக்கும் விதமாக இன்று முற்றுகைப் போராட்டம் நடத்தியதாகவும் கூறினார்

கருத்துகள் இல்லை: