
‘டிராபிக் ராமசாமி படத்தில் சந்திரசேகர் நடிப்பதாகச் சொன்னபோதே அதை வேண்டாம் என தடுத்தார் விஜய். ‘இந்தப் படத்துல நீங்க நடிச்சா அரசாங்கத்தை பகைச்சுக்க வேண்டியிருக்கும். அதனால நமக்கு சிக்கல் வரும்..’ என்று சொன்னாராம்.
ஆனால் அதை சந்திரசேகர் கேட்கவில்லை. அதன் பிறகு பல பேட்டிகளிலும் தமிழக அரசை கடுமையாக விமசர்சனம் செய்தார் சந்திரசேகரன்.
விஜய்யைப் பொறுத்தவரை எதுவாக இருந்தாலும் அவரது அம்மா ஷோபா மூலமாகத்தான் அப்பாவிடம் பேசுவார்.
’தமிழ்நாட்டுல எதுவுமே சரியில்லைதான். என்ன செய்ய முடியும். இவரு பேசினா எல்லாம் மாறிடுமா? படத்துல டயலாக் பேசினால் கூட யாரும் கண்டுக்கமாட்டாங்க. ஆனால், இவரு பேட்டியிலகூட தமிழக அரசை திட்டிட்டு இருக்காரு. இவரை எதுவும் செய்ய மாட்டாங்க. சிக்கல் எனக்குதான் வரும். ஏதோ நான்தான் திட்டம் போட்டு அவரை பேச வைக்கிறதா நினைப்பாங்க. ஏற்கெனவே நான் அரசியலுக்கு வரப்போறேன்னு சொல்லிட்டு இருக்காங்க. அதுவே அரசியல்வாதிகளை கோபமாக்கியிருக்கும். இதுல இவரு வேற அதையெல்லாம் உறுதிப்படுத்துற மாதிரி பேசிட்டு இருக்காரு’ என்று தன் அப்பாவின் மீது வருத்தப்பட்ட விஜய், திரைப்படங்களுக்கு மானியம் வழங்கும் நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடந்தபோது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் அப்பாவை அவமரியாதை நடத்தியதில் அப்பாவை விட்டுக் கொடுக்காமல் தமிழக அரசு மீது கோபப்பட்டிருக்கிறார்.
‘முதல்நாள் டிவி பேட்டியில எடப்பாடியை அப்பா விமர்சிச்சாரு. அதனாலதான் அடுத்த நாள் அவர் கையால மானியம் வாங்கப் போனபோது அவமரியாதை பண்ணியிருக்காங்க. இது அப்பாவுக்கு மட்டுமில்ல, எனக்கும் அவமரியாதைதானே...’ என்று தன் அம்மாவிடம் சொல்லியிருக்கிறார் விஜய்.
அதிமுகவைப் பொறுத்தவரை கமல், ரஜினியை தொடர்ந்து விஜய்யும் அரசியலுக்கு வந்துவிடுவார் என்றே நினைக்கிறது. கமல், ரஜினியால் பெரிய பாதிப்பு இருக்காது என்றும், அதுவே விஜய் வந்தால், அது, அதிமுகவுக்கு மட்டுமல்ல... பொதுவாகவே தமிழக அரசியலில் சில மாற்றங்கள் வரும் என்று நினைக்கிறது. அதனால்தான் விஜய் குடும்பத்தில் இருந்து வரும் விமர்சனங்களை ரொம்பவே சீரியஸாகப் பார்க்கிறது அதிமுக.” என்று முடிந்தது அந்த மெசேஜ். அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக்.
தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றையும் அப்டேட் செய்தது ஃபேஸ்புக். “விஜய் பிறந்தநாளுக்காக அவரது ரசிகர்கள் ஒட்டிய போஸ்ட்களை உளவுத் துறை உன்னிப்பாக கவனித்தபடி இருக்கிறது. பல ஊர்களில், தமிழகத்தை ஆளவா தலைவா, நெக்ஸ்ட் சி.எம்., எங்கள் தமிழ்நாடு சர்கார்... என்றெல்லாம் ரசிகர்கள் தங்களது ஆசையை போஸ்டர்களாக வெளிக்காட்டி இருந்தார்கள். குறிப்பாக திருச்சியிலும், நெல்லையிலும் விஜய் ரசிகர்களின் அதிரடி பலமாகவே இருந்திருக்கிறது’ என்று உளவுத் துறை ரிப்போர்ட் போயிருக்கிறது. விஜய் அனுமதி இல்லாமல்தான் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன என்றும் உளவுத் துறை சொல்லியிருக்கிறதாம்.
சர்கார் மேட்டர் அரசின் உளவுத்துறை சென்றிருப்பது பற்றி விஜய்யிடமும் அவரது நலம் விரும்பிகள் சொல்லியிருக்கிறார்கள். ‘கமல் வந்துட்டாரு. ரஜினி வரப் போறாரு. அவங்க என்ன பண்றாங்கன்னு பார்ப்போம். அதுக்குள்ள இதெல்லாம் எதுக்கு? இப்போதைக்கு சினிமா போதும்..’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருகிறாராம் விஜய்” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.
அதற்கு லைக் போட்ட வாட்ஸ் அப், “இன்று எல்லாம் விஜய் மயமாகிவிட்டது. அதனால், இன்னொரு விஜய் தகவலை சொல்கிறேன். விஜய் மகன் சஞ்சய் பிளஸ் டு முடித்துவிட்டு இந்த ஆண்டு கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கிறார்” எ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக