புதன், 20 ஜூன், 2018

தமிழிசை :வளர்ச்சியை எதிர்ப்போர் கைது செய்யப்படவேண்டும் .. சேது சமுத்திர திட்டத்தை புதைத்தவர்கள்

Venkat Ramanujam : வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட
வேண்டும்" என்கிறாரே Tamilisai Soundararajan ...
ஸ்டெர்லைட் காட்டிலும், 277கிமீ எட்டு வழி சாலை காட்டிலும்,30 மணி நேரம் கப்பல் நேரத்தை மிச்ச படுத்தும் சேது சமுத்திரக் கப்பல் கால்வாய்த் திட்டம் மிக்க லாபத்தை மட்டும் அல்ல அதிக பட்ச தொடர் வேலைவாய்ப்புகளை பெற்று தரும்...
காரணம் சேது சமுத்திரக் கப்பல் கால்வாய்த் திட்டம் நிறைவேறும்பொழுது இக்கால்வாய் வழியாக செல்லக்கூடிய அளவும் வேகமும் கொண்ட பெரிய கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் இருந்து இலங்கையைச் 400 கிமீ சுற்றாமல் சேதுக் கால்வாய் வழியாக வங்கக் கடலை அடைய முடியும்.இதன் பலன்கள் பல... அவற்றில் இதோ சில:
இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு இடையேயான தூரம் 424 கடல்மைல் வரை குறையும் . அதனால் கணிசமான எரிபொருள் சேமிப்பு எற்பட்டு அந்நியச் செலாவணி சேமிப்பு நடக்கும்.
கப்பல்களின் பயண நேரம் 30 மணிநேரம் வரை குறைந்து கப்பல் வாடகைக் கட்டணத்தில் சேமிப்பு நடக்கும . அதனால் எற்படும் inland water ways தேசிய நெடுஞ்சாலை லாரிகள் போக்குவரத்து குறைய மீண்டும் அந்நியச் செலாவணி சேமிப்பு நடக்கும்.

கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் ஒன்று சரக்குப் பெட்டகப் போக்குவரத்திற்கென ஒருங்கிணைப்புத் துறைமுகமாக மேம்படுத்தப்பட்டால் அதனால் தமிழ்நாடு வளர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு பெருகும்.
இத்தனை பயனை தரும் சேது சமுத்திர திட்டம் எதிர்த்து நீதிமன்றத்திலே தடை கோரும் பாஜக எம்பி Dr. Subramanian Swamy யையும் ., அந்த குரலுக்கு அதரவாக பேசி பிரமாண பத்திரம் தாக்கல் செய்த மோடி அரசின் சட்டதுறை மந்திரி ரவிஷஙகர் பிராசத்தையும் எங்கெ எப்போது எப்படி கைது செய்யலாம் என்றும் மாண்புமிகு தமிழிசை கூறினால் அவருக்கு புண்ணியம் கிட்டும் ..

கருத்துகள் இல்லை: