
Chinniah Kasi : கோவை மக்கள் அதிர்ச்சி
குடிநீர் விநியோகிக்க பிரெஞ்சு கம்பெனிக்கு உரிமம்
கோயம்புத்தூர், ஜுன் 20-கோவை மாநகரின் குடிநீர் விநியோகிக்கும் உரிமம் பிரான்ஸ்நாட்டை சேர்ந்த சூயஸ் நிறுவனத்திற்குரூ. 3 ஆயிரத்து 150 கோடிக்கு 26வருடங்களுக்கு வழங்கப்பட்டிருக் கிறது. இது கோவை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருக்கிறது. கோவை நகருக்கு சிறுவாணி, பில்லூர் அணைகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கோவை மாநகராட்சியில் 2018-19ம் ஆண்டு நிதி நிலை அறிக்கை இந்தாண்டு துவக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பற்றாக்குறை ஏதுமின்றி உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அந்த பட்ஜெட்டில் 24 மணிநேரமும் தங்கு தடையின்றி குடிநீர் வழங்க அம்ரூட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படிபில்லூர் இரண்டாவது குடிநீர் திட்டத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 125 எம்.எல்.டி, சிறுவாணி குடிநீர் திட்டத்தின்படி நாளொன்றுக்கு 75எம்.எல்.டி என மொத்தம் 200 எம்.எல்.டி குடிநீர் 24 மணி நேரமும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப் பட்டிருந்தது. இதற்காக பொது மக்கள் மற்றும் தனியார் பங்களிப்பு மூலம் ரூ. 556.57 கோடி மதிப்பீட்டில் திட்டத்தை மேற்கொள்ள 2015லேயே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் துணை பிரதான குழாய்கள் 105 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டது. மேலும் தரை மட்ட நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும்நீர் உந்து நிலையங்கள், 29 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள்,63 பகுதிகளில் 1470 கி.மீ நீளத்திற்கு குடிநீர் பகிர்மான குழாய்கள்அமைக்கப்படும். இத்திட்டம் ஜெஎன்என்யூஆர்எம் திட்டத்தில் இருந்து அம்ரூட் திட்டத்திற்கு மாற்றப்பட்டு ரூ. 506 கோடியில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்து வதற்குத்தான் தனியார் பங்களிப்புஎன்ற பெயரில் சூயஸ் நிறுவனத் திற்கு குடிநீர் விநியோகிக்கும் உரிமத்தை 25 ஆண்டுகளுக்கு வழங்கி 24.11.2017ல் பணி அறிவிப்பு கடிதம்வழங்கப்பட்டது. அதன் பின்னர் 8.1.18அன்று சலுகை ஒப்பந்தம் என்றபெயரில் புதுப்பித்து 26 ஆண்டு களுக்கு குடிநீர் விநியோகிக்கும் உரிமத்தை மாநகராட்சி நிர்வாகம் ரூ. 3 ஆயிரத்து 150 கோடிக்கு சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறது. உள்ளாட்சி நிர்வாகத்தில் மக்கள்பிரதிநிதிகள் யாரும் இல்லாத நிலையில், மக்களின் சார்பில் எந்தகருத்துருவும் மேற்கொள்ளப்படா மல் அரசு அதிகாரிகள் மற்றும்அமைச்சர்களின் ஏற்பாட்டில் இந்தஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக் கிறது. இதுகுறித்து சூயஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவின் மிகப்பெரிய குடிநீர் விநியோக ஒப்பந்தம் இதுவே ஆகும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே தில்லி மாளவியா நகரின்குடிநீர் விநியோகிக்கும் உரிமத்தைபெற்றிருக்கிறோம். மேலும் கொல்கத்தா மற்றும் பெங்களூரில்குடிநீர் விற்கும் உரிமையை பெற்றி ருக்கிறோம். இதைத்தொடர்ந்து தற்போது கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 சதுர கிலோமீட்டர் பரப்பில் வசிக்கும் 16லட்சம் குடியிருப்பு களுக்கு 24 மணி நேரமும் குடிநீர்வழங்கும் உரிமத்தை பெற்றிருக் கிறோம். இதன் மூலம் 1லட்சத்து 50 ஆயிரம் குடிநீர் இணைப்புகளை ஏற்படுத்துவோம். இதற்கான ஆய்வுப் பணிகள் ஒரு ஆண்டும், கட்டுமான காலம் 4 ஆண்டுகள், இயக்குதல் மற்றும் பராமரிப்பு பணிகள்21 ஆண்டுகள் என்ற வகையில் 26ஆண்டுகளுக்கு இது நடைமுறைப் படுத்தப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.இதன் மூலம் இனி கோவை மாநகரின் குடிநீர் கட்டணத்தை மாநகராட்சி தீர்மானிக்க முடியாது. சந்தைநிலவரப்படி இனி சூயஸ் நிறுவனம்தான் விலையை தீர்மானிக்கும். இனி குடிநீர் சமமான முறை யில்இருக்காது. பணத்திற்கேற்ற அளவு மட்டுமே குடிநீர் கிடைக்கும். அவர்கள் நிர்ணயிக்கும் அளவிற்குபணத்தை செலுத்த முடியாதவர் களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் அபாயநிலை ஏற்பட்டிருக்கிறது.இந்நிலையில் கோவை லாலி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சூயஸ் நிறுவனம் தனது கணக்கெடுப்பு பணிகளை தொடங்கி உள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் இரா.முருகவேள் நம்மிடம் கூறிய தாவது:குடிநீர் விலையை நிர்ண யிப்பதில் மக்களுக்கு எந்த பங்கும் இல்லை என்பது ஜனநாயக நெறிமுறை அல்ல. இதுகுறித்து மக்கள்பிரதிநிதிகள் அங்கம் பெறும் நாடாளு மன்றம், சட்டமன்றம், மாநகராட்சி உள்ளிட்ட எந்த இடத்திலும் விவாதித்ததாக தெரியவில்லை. சூயஸ் நிறுவனம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது. இப்படி சர்வாதிகார முறையில் ஆட்சிமுறை மாறிக்கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.இவ்வாறு அவர் கூறினார்.குடிமக்களுக்கு அரசு செய்து தர வேண்டிய அடிப்படை தேவைகளில் ஒன்று குடிநீர். அந்த குடிநீரை விநி யோகிக்கும் வேலையைக் கூட செய்யமுடியாத கையாலாகாத அரசாக எடப்பாடி பழனிசாமி அரசு மாறியிருக்கிறது என்று சமூகவலைத் தளங்களில் அரசை விமர்சித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக