அமெரிக்காவில் பிரசவத்தின் போது கோமா நிலைக்கு தள்ளப்பட்ட
இளம்தாய் தனது குழந்தையின் அழுகையால் சுயநினைவு பெற்ற சம்பவம் அனைவரையும்
ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவைச் சேர்ந்தவர் ஜெரோம். இவரது மனைவி ஷெல்லி
கேவ்லே பிரசவத்திற்காக அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த வாரம்
அனுமதிக்கப்பட்டிருந்தார்
ஷெல்லிக்கு பிரசவ வலி ஏற்படவே அவரை பிரசவ அறைக்கு மருத்துவர்கள் கொண்டு
சென்றனர். பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த ஷெல்லிக்கு திடீரென
காலில் ரத்தம் உறைந்து கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.
கோமா நிலையிலேயே அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கோமா
நிலையில் இருந்த ஷெல்லி குழந்தையின் அழுகுரலால் சுயநினைவுக்கு
திரும்பியுள்ளார். உருக்கம் நிறைந்த இந்த வீடியோ தொகுப்பு அனைவராலும்
அதிகமாக பகிரப்பட்டும், பார்க்கப்பட்டும் வருகிறது.webdunia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக