செவ்வாய், 15 செப்டம்பர், 2015

கூட்டுறவு ஊழியர்கள் 5 பேர் பட்டினியால் பலி

தேனி: கூட்டுறவு ஊழியர்களுக்கு மூன்று ஆண்டுகளாக சம்பளம் வழங்காததால், ஐந்து பேர் பட்டினியால் இறந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.தமிழகத்தில், 800க்கும் மேற்பட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள், வட்டார கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இதில், செயலர் உட்பட, 3,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.
மாநில கூட்டுறவு வீட்டு வசதி இணையம், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும்; இதை, புதிதாக வீடு கட்டுவோருக்கு, 14 சதவீத வட்டியில் கடன் வழங்குகின்றன. வட்டியை வசூலித்து, 3 சதவீதத்தை நிர்வாக செலவு செய்து கொள்ள அனுமதி உள்ளது. இப்பணத்தில் அலுவலக வாடகை, ஊழியர்கள் சம்பளம் வழங்கப்பட்டது. "கூட்டுயர்வே நாட்யர்வு" நல்ல காமெடி.


கடந்த, தி.மு.க. ஆட்சியில் வீட்டு வசதி சங்கங்கள் வழங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
மேலும், 75 சதவீதம் வரை அபராத வட்டி தள்ளுபடி என, சலுகை வழங்கியது. இதனால், ஒவ்வொரு கூட்டுறவு சங்கங்களுக்கும், 30 லட்சம் முதல் 10 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது. இந்த இழப்பை ஈடுகட்ட, நிதி வழங்கப்படும் என, உறுதி அளிக்கப்பட்டது.அதன்படி, அபராத வட்டி தொகையை, மாநில கூட்டுறவு இணையத்திற்கு அரசு வழங்கியது. ஆனால், கூட்டுறவு இணையம், அபராத வட்டி தொகையை சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்காமல், நிலுவையில் இருந்த வட்டிக்கு வரவு வைத்து கொண்டது.

கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டும் கூட்டுறவு சங்கங்களுக்கு, மாநில கூட்டுறவு இணையம் கடன் வழங்குவதை நிறுத்திவிட்டது. இதனால், கூட்டுறவு வீடு கட்டும் கூட்டுறவு
சங்கங்கள் வரவு - செலவு செய்ய முடியாமல் முடங்கி விட்டன. சங்கத்தில் நிதி பற்றாக்குறையால், ஊழியர்கள் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சம்பளம் பெற முடியாமல் தவிக்கின்றனர். மாநில அளவில் இதுவரை, ஐந்து பணியாளர்கள் பட்டினியால் இறந்ததாகவும், பலர் கூலி வேலைக்கு செல்வதாகவும் நிர்வாகிகள் கூறுகின்றன dinamalar.com

கருத்துகள் இல்லை: