கேரள மாநிலம் கோட்டயத்தில் கன்னியாஸ்திரி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டயம் மாவட்டம் பாலா நகரில் உள்ள லிசெக்ஸ் கார்மெலைட் என்ற கான்வென்ட் பள்ளியில் இன்று காலை சகோதரி அமலா(69) என்று அழைக்கப்படும் கன்னியாஸ்திரி தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர், போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எர்ணாகுளம் மாவட்டத்தின் ஐ.ஜி அஜித் குமார் விசாரணையை தொடங்கியுள்ளார். முதற்கட்ட விசாரணையின் படி, மர்மமாக இறந்து கிடந்த சகோதரி அமலா இன்று காலை நேர பிரார்த்தனையில் பங்கேற்கவில்லையென்றும், கடந்த 2 நாட்களாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததும் தெரிய வந்துள்ளது மாலைமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக