மாநாட்டிற்கு வந்த முதலீட்டாளர்களிடம்
அதிமுக அமைச்சர்கள் லஞ்சம் கேட்டு
தொந்தரவு செய்கிறார்கள்: விஜயகாந்த்
திண்டுக்கல் மாவட்டம், பழநியில் தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில், விஜயகாந்த் பேசியபோது, ’’அதிமுக ஆட்சியில் ஊழல் மலிந்து கிடக்கிறது. நகர் முழுவதும் ஜெயலலிதாவுக்கு கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. 2016 தேர்தலில் மக்கள் ஜெயலலிதாவுக்கு கெட்-அவுட் சொல்வார்கள்.. தேர்தலில் யாரும் கூட்டணி சேரக்கூடாது என்பதில் சிலர் கவனமாக உள்ளனர். ஆனால் அது நடக்காது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வந்த முதலீட்டாளர்களிடம் அதிமுக அமைச்சர்கள் லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள்.
சகாயம் ஆய்வுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க இந்த அரசு முன் நிற்கிறது. ஆனால், டாஸ்மாக் கடைக்கு மட்டும் இந்த அரசு போலீஸ் பாதுகாப்பு வழங்குகிறது’’ என்று குற்றம்சாட்டினார். nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக