>நடிகர் விஜய் விவகாரத்தில் தேர்தல் கமிஷன் அதிரடி :
பாரதீய
ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடி
அறிவிக் கப்பட்டுள்ளார். அவர் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து
பிரசாரம் செய்து வருகிறார்.
கடந்த
வாரம் தேர்தல் பிரசாரத்துக்காக சென்னை வந்த அவர் தமிழ் திரை உலகின்
சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்தார்.
அப்போது ரஜினிகாந்த் ‘நரேந்திரமோடி அவர் நினைப்பது போலவே வெற்றிபெற
வாழ்த்துகிறேன்’ என்றார்.
இந்த
நிலையில் கோவைக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த நரேந்திரமோடியை ‘இளைய
தளபதி’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விஜய் வந்து
சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத் தில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியது.
சென்னைக்கு
நரேந்திரமோடி வந்தபோது என்னை சந்திக்க விரும் பினார். அப்போது நான்
ஆந்திராவில் படப்பிடிப்பில் இருந்ததால் அவரை சந்திக்க முடியவில்லை. எனவே
கோவைக்கு வந்த அவரை சந்தித்தேன். பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டோம்
மற்றபடி எதுவும் இல்லை என்றார்.
இருப்பினும்
தேர்தல் கமிஷன் நடிகர் விஜய்யின் பேச்சை நம்புவதாக இல்லை. அவர் ஒரு
கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார் என முடிவு செய்து அதிரடி நடவடிக்கையில்
இறங்கியது. நடிகர் விஜய் பிரபலமான ஒரு நகைக்கடையின் விளம்பர தூதராக
உள்ளார். அவர் அந்த நகைக்கடைக்காக செய்த விளம்பர பலகைகள் கோவை நகர்
முழுவதும் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
அந்த
விளம்பரங்களில் உள்ள நடிகர் விஜய்யின் முகத்தை மறைத்து விடுமாறு கோவை
மாநகர திட்ட அமைப்பு அதிகாரிக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. மறு நிமிடமே
திட்ட அதிகாரி அந்த விளம் பரத்தின் ஏஜன்சியை தொடர்பு கொண்டு விளம்பரத்தில்
உள்ள விஜய் படத்தை மறைத்து விடுங்கள் என்று உத்தரவிட்டார்.
அதன்படி
விளம்பர ஏஜன்சியின் ஊழியர்கள் களத்தில் இறங்கினர். கோவை நகர் முழுவதும்
வைக்கப் பட்டிருந்த நகைக்கடை விளம்பரத்தில் உள்ள நடிகர் விஜய் படங்களை
மறைத்து விட்டனர். இது ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி
உள்ளது.nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக