வெள்ளி, 25 ஏப்ரல், 2014

புதுக்கோட்டையில் ஜரூராய் நடந்த அதிமுக பண பட்டுவாடா- கண்டுகொள்ளாத போலீஸ்


 மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணப்பட்டுவாடா கனக் கச்சிதமாக நடந்ததுள்ளது. திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம் லோக்சபா தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரிப்பதற்காக மாவட்டம் முழுவதும் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு தலா 200 ரூபாய் வீதம் பண பட்டுவாடா நடந்ததுள்ளது. பூத் கமிட்டி நிர்வாகிகள் மூலம் வழங்கப்பட்ட பணம் வாக்காளர்களிடம் முறையாக சென்றுள்ளதா என்பதை கிளை நிர்வாகிகள் ஆய்வு செய்ததும் தெரியவந்துள்ளது. வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பண பட்டுவாடா செய்ததை திமுக உள்ளிட்ட இதர அரசியல் கட்சியினரும் சரி, காவல்துறையும் சரி கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: