சென்னை: ஆளும் கட்சியினரின் பணம் பட்டுவாடாவுக்காக தமிழகத்தில் 144
தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் மீது தி.மு.க
பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் பிரவீண்குமாரை
சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது: தோல்வி பயம் காரணமாக அதிமுகவினர் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும்
அதிமுக பணப்பட்டுவாடா செய்து வருகிறது.
ஒரு ஓட்டுக்கு ரூ.3000 வரை ஆளுங்கட்சியினர் வழங்கி வருகின்றனர். இது
குறித்து பல்வேறு இடங்களில் திமுகவினர் புகார் அளித்தும் தேர்தல்
பார்வையாளர்களோ, காவல்துறையினரோ எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
தேர்தல் ஆணையம் விதித்துள்ள 144 தடை உத்தரவு எதிர்க்கட்சிகளுக்கு எதிராக
உள்ளது. இந்த விவகாரங்கள் குறித்து உயர் நீதிமன்றத்திலும் வழக்கு
தொடர்ந்துள்ளோம் என்று ஸ்டாலின் தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக