வியாழன், 4 டிசம்பர், 2014

சமாஜ்வாடி ஜனதா தளம் ! 6 கட்சிகள் இணைந்து புதிய கட்சி! முலாயம் லாலு நிதீஷ் சரத் யாதவ்.....

சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசை எதிர்த்து உருவான புதிய கட்சியான ‘‘ஜனதா தளம்’’ மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. வி.பி.சிங் பிரதமராக பதவியில் அமர்ந்தார். ஆனால் ஜனதா தளம் மூத்த தலைவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜனதா தளம் கட்சி துண்டு, துண்டாக உடைந்து பல கட்சிகளாக மாறின.
அப்படி சிதறிய கட்சிகளில் முலாயம்சிங்கின் சமாஜ்வாடி, லல்லு பிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா தளம், நிதிஷ்குமார், சரத்யாதவின் ஐக்கிய ஜனதா தளம், தேவேகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம், சவுதாலாவின் இந்திய தேசிய லோக்தளம், கமல் மொரர்காவின் சமாஜ்வாடி ஜனதா கட்சி ஆகிய 6 கட்சிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து, புதிய தேசிய கட்சியாக மாற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான முதல் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று மதியம் முலாயம்சிங் வீட்டில் நடந்தது. இந்த கூட்டத்தில் நிதிஷ்குமார், லல்லுபிரசாத் யாதவ், சரத்யாதவ், தேவேகவுடா உள்பட 6 கட்சிகளின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
புதிய கட்சியை எப்படி வடிவமைப்பது? எப்படி செயல்படுத்துவது என்று கூட்டத்தில் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
புதிய கட்சிக்கு ‘‘சமாஜ்வாடி ஜனதா தளம் (எஸ்.ஜே.டி) என்று பெயரிடப்படும் என்று தெரிகிறது. 6 கட்சிகளின் தலைவர்களில் மூத்தவர் முலாயம்சிங்தான் என்பதால் அவர்தான் புதிய கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுவார்.
இதில் இறுதி முடிவு எடுக்கப்பட்டதும், 6 கட்சித் தலைவர்களும் சேர்ந்து கையெழுத்திட்டு புதிய தேசிய கட்சியை முறைப்படி தேர்தல் கமிஷனில் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த புதிய கட்சிக்கு 7.06 சதவீத ஓட்டுக்கள் இருப்பதால் உடனடியாக அந்த கட்சிக்கான அங்கீகாரத்தை தேர்தல் கமிஷன் வழங்கும் என்று தெரிகிறது.
தற்போது உத்தரபிர தேசத்தில் சமாஜ்வாடி கட்சிக்கு–5, பீகாரில் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சிக்கு–4, அரியானா, பீகார், கர்நாடகாவில் இந்திய தேசிய லோக்தளம், ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளுக்கு தலா 2 எம்.பி.க்கள் உள்ளனர். எனவே 6 கட்சிகள் ஒன்று சேரும் போது, அந்த கட்சிக்கு பாராளுமன்ற மக்களவையில் 15 எம்.பி.க்கள் இருப்பார்கள்.
இதன் மூலம் பாராளு மன்றத்தில் காங்கிரஸ், அ.தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் போல புதிய தேசிய கட்சியும் தனித்துவத்துடன் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. maalaimalar.com

கருத்துகள் இல்லை: