சனி, 6 டிசம்பர், 2014

சகாயம் தங்கியிருந்த அறையில் ஒட்டுகேட்பு கருவி? காலி செய்யும்படி கூறியதாகவும் குற்றச்சாட்டு

மதுரை : கிரானைட் முறைகேடு குறித்து விசாரிக்க, மதுரையில் தங்கியிருந்த சர்க்யூட் ஹவுஸ் அறையில், ஓட்டுகேட்பு கருவி பொருத்தப்பட்டதாக வந்த தகவலையடுத்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் வேறு அறைக்கு மாறினார். மாறிய அறை அமைச்சருக்கு(செல்லூர் ராஜூ) ஒதுக்கப்பட்டுள்ளதால், அதை காலி செய்யும்படி சகாயத்தின் உதவியாளரிடம் பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். ஆனால் அறையை காலி செய்ய சகாயம் மறுத்து விட்டார்.சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி கிரானைட் முறைகேடு குறித்து விசாரிக்க சகாயம் மதுரையில் முகாமிட்டுள்ளார். அவர் தங்க அழகர்கோவில் ரோடு சர்க்யூட் ஹவுஸ் முதல் மாடியில் அறை (எண் 1) ஒதுக்கப்பட்டிருந்தது. அவருடன் வந்த அறிவியல் நகர அலுவலர்கள் ஹேமா, தேவசேனாதிபதி தங்க முறையே அறைகள் எண் 2, 3 ஒதுக்கப்பட்டிருந்தன. போனில் தகவல்: நேற்று முன் தினம் பொது மக்களிடம் மனுக்களை பெற்று விசாரணை முடித்த சகாயம், உதவியாளர் ஆல்பர்ட்டுடன் சர்க்யூட் ஹவுஸ் அறையில் தங்கினார். இரவு 11 மணிக்கு அவரது அறை மற்றும் விசாரணை அலுவலகத்தில் ஒட்டுகேட்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக போனில் ஒருவர் தெரிவித்தார்.  சகாயத்திற்கு ஜெயா கொடுக்கும் குடச்சளால், சகாயம் வெறியாகி, சில பல அதிமுக அமைச்சர்களை ஜெயிலுக்குள்//////// 
இருப்பினும் அதை சகாயம் பொருட்படுத்தவில்லை.அருகில் தங்கியிருந்த மூத்த அறிவியல் அலுவலர்கள் அறைகளில் பீப்...பீப்... சத்தம் ஒலித்தது. இதுகுறித்து அவர்கள் சகாயத்திடம் தெரிவித்தனர்.பின் சகாயம் அங்கிருந்த ஊழியரிடம் தெரிவித்தார். அதையடுத்து கீழ்தளத்திலுள்ள அறை (எண் 11) ஒதுக்கப்பட்டதையடுத்து சகாயம் அங்கு தங்கினார். அறிவியல் அலுவலர்களுக்கு புதிய கட்டடத்தில் அறைகள்(எண் 2, 3) ஒதுக்கப்பட்டன.



காலி செய்ய நெருக்கடி:
கீழ்தளத்தில் சகாயம் தங்கியது, அமைச்சர்கள் தங்கும் அறை. அமைச்சர்கள் வரலாம் என்ற தகவலால், நேற்று காலை அந்த அறையை காலி செய்து வேறு ஒரு அறைக்கு செல்லும்படி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஒருவர், சகாயத்தின் உதவியாளரிடம் தெரிவித்தார். பின் பொதுப்பணித்துறை உயரதிகாரி ஒருவரும் அவரிடம் பேசியுள்ளார். ஆனால் சகாயம், அறையை காலி செய்ய மறுத்தார். தொடர்ந்து வற்புறுத்தினால் லாட்ஜில் சென்று தங்குவதை தவிர வேறுவழியில்லை என சகாயம் தெரிவித்தார். பின் கலெக்டர் அலுவலக அதிகாரி ஒருவர் சகாயத்துடன் பேசினர். அமைச்சர் வேறு அறையில் தங்குவதால் சகாயத்தை வேறு அறைக்கு மாற்ற வேண்டாம் என அவர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



அலுவலகத்திலும் சோதனை:
நேற்று காலை 11 மணிக்கு சகாயம், விசாரணை அலுவலகத்தில் உதவியாளருடன் ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தினார். சந்தேகப்படும்படி வகையில் எந்த கருவியும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் அரை மணி நேர தாமதத்திற்கு பிறகு விசாரணையை துவங்கினார்.



மறைமுக மிரட்டல்:
விசாரணை குழு தரப்பில் கூறியதாவது:சகாயத்தை விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டதிலிருந்து மறைமுகமாக பல தடைகள் ஏற்படுத்தப்பட்டன. மதுரையில் சகாயத்திடம் மனு கொடுக்க சென்றவர்களை, குறிப்பிட்ட கிரானைட் நிறுவன ஆதரவாளர்கள் கண்காணித்ததாக தகவல் வெளியானது. இந்த தகவல் தெரிந்து சகாயம் கேட்டு கொண்டதையடுத்து விசாரணை அலுவலகத்தில், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின் அறையில் ஓட்டு கேட்பு கருவி பொருத்தப்பட்டதாக மர்மநபர் போனில் தெரிவித்தார். தற்போது விசாரணை குழுவினருக்கான உணவும் வெளியில் இருந்து பெறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை குழு சார்பில் கோர்ட் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றனர்.

பணி நீக்கம்: சர்க்யூட் ஹவுசில்தற்காலிக ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் ஒருவர் தான் சகாயத்திற்கு கீழ்தளத்திலுள்ள அறையை ஒதுக்கியுள்ளார். இப்பிரச்னையையடுத்து அந்த ஊழியரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்து விட்டனர். தினமலர்.com

கருத்துகள் இல்லை: