செவ்வாய், 25 மார்ச், 2014

ஜெயலலிதாவின் நாலாயிரம் கோடி சொத்துகுவிப்பு விபரத்தை பத்திரிகைகள் மூடி மறைப்பது ஏன் ? நடந்த பேரம் தான் என்ன?


ஏறத்தாழ நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் சொத்து ஜெயலலிதா தரப்பினரிடம் இருப்பதாக நேற்றையதினம் பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தில் அரசு வழக்கறிஞர் எடுத்துத் தெரிவித்திருக்கிறார். இந்தச் செய்திப் பற்றி தமிழ் நாட்டுப் பத்திரிகைகள் குறிப்பாக சென்னையிலிருந்து வெளிவருகின்ற பத்திரிகைகள், நடுநிலை ஏடுகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்கின்ற பத்திரிகைகள் வெளியிடாததின் காரணம் என்ன? சூட்சுமம்என்ன? ரகசியம் என்ன? நடந்த பேரம் தான் என்ன? 
திமுக தலைவர் கேள்வி - பதில் அறிக்கை:

 கேள்வி :- “இரட்டை இலை” சின்னங்களை சிறிய பேருந்துகள் போன்ற வற்றில் மறைக்கப்பட வேண்டு மென்று பொருளாளர் மு.க. ஸ்டாலின் தொடுத்த வழக்கில் உயர் நீதி மன்றம் இன்றைய தினம் தீர்ப்பு அளித்திருப்பதைப் பற்றி?

 கலைஞர் :- தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறோம். நீதி மன்றத் தீர்ப்புக்கு தலை வணங்கி அனைவரும் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக தேர்தல் ஆணையம் ஜனநாயகம் ரீதியில் நடைபெறுகிறது என்பதற்கு அடையாளமாக, ஏற்கனவே இந்த “இரட்டை இலை” சின்னங்களை மறைக்க வேண்டுமென்று கூறியிருந்தது.


அந்தத் தீர்ப்பை மதித்து, கட்சி சின்னங்களை, அரசு சார்புடைய எந்த நிகழ்விலும், அறிமுகப்படுத்தக் கூடாது, பயன்படுத்தக் கூடாது என்பதை நானும் கண்டிப்பாக எடுத்துக் கூற விரும்புகிறேன். இது தான் உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பாகவும் அமைந்திருக்கிறது.


 கேள்வி :- தி.மு. கழகத்திலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்ட மு.க. அழகிரி, ம.தி.மு.க. பொதுச் செயலாளரையும், மற்ற கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கட்சியின் மீது அவதுhறு கூறி வருகிறாரே?

கலைஞர் :- அவர் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டதற்குப் பிறகு உரிய விளக்கங்களை அதற்கு அளிக்காமல், மேலும் மேலும் தி.மு. கழகத்தை விமர்சிப்பதாலும், தி.மு. கழகத் தலைவர்களைப் பற்றி அவதுhறு கூறி வருவதாலும், அவர் வெளியிடுகின்ற கருத்துகள் தி.மு. கழகத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், களங்கம் கற்பிக்கும் வகையிலும் இருப்பதாலும், நானும், பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களும் இன்றைக்கு கலந்து பேசி, அவர் கட்சியிலிருந்து நிரந்தரமாக அறவே நீக்கப்படுகிறார் என்று
தெரிவித்திருக்கிறோம்.


 கேள்வி :- ஜெயலலிதா நான்காயிரம் கோடி ரூபாய்க்குச் சொத்து சேர்த்திருப்பதாக நேற்றையதினம் பெங்களூரில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறாரே?

 கலைஞர் :- இந்தச் செய்தி பத்திரிகைகளில் வந்திருக்கிறது. பத்திரிகைகள் என்றால், அனைத்துப் பத்திரிகைகளிலும் அல்ல. முரசொலியில் வந்திருக்கிறது, தினகரனில் வந்திருக்கிறது. மற்றப் பத்திரிகைகள் இந்தச் செய்தியை ஜெயலலிதாவை ஆதரிக்கும் வகையில் இருட்டடிப்பு செய்திருக் கின்றன. ஏறத்தாழ நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் சொத்து ஜெயலலிதா தரப்பினரிடம் இருப்பதாக நேற்றையதினம் பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தில் அரசு வழக்கறிஞர் எடுத்துத் தெரிவித்திருக்கிறார். இந்தச் செய்திப் பற்றி தமிழ் நாட்டுப் பத்திரிகைகள் குறிப்பாக சென்னையிலிருந்து வெளிவருகின்ற பத்திரிகைகள், நடுநிலை ஏடுகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்கின்ற பத்திரிகைகள் வெளியிடாததின் காரணம் என்ன? சூட்சுமம்என்ன? ரகசியம் என்ன? நடந்த பேரம் தான் என்ன? nakkheeran.in/

கருத்துகள் இல்லை: