புதன், 26 மார்ச், 2014

விமானம் மூழ்கிய ஆதாரம் எது? மலேசியா பொத்தி வைத்த ரகசியம் இதோ இதுதான்!


மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் தண்ணீரில் மூழ்கியது என எப்படி அடித்துச் சொல்கிறது மலேசியா? அதற்கான விடை தற்போது தெரியவந்துள்ளது. தொழில்நுட்பம்-பிளஸ்-ஊகம் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது மலேசியாவின் முடிவு.
இப்போது நாம் கூறப்போகும் விஷயம், மலேசியாவுக்கு சில தினங்களுக்கு முன்னரே பிரிட்டிஷ் நிறுவனம் இன்மார்சாட்டினால் சொல்லப்பட்டு விட்டது. அதை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் நாலைந்து நாட்களை கடத்திய மலேசியா, பின்னர், “விமானம் மூழ்கிவிட்டது” என்று மட்டும் அறிவித்தது.
அதை எப்படி கண்டுபிடித்தோம் என்று வாய்திறக்கவில்லை.
அதையடுத்து சீன அரசு ஆதாரம் கேட்டது, பயணிகளின் உறவினர்கள் கேட்டார்கள், நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்காவும், “மலேசியா என்ன வைத்திருக்கிறது என்பதை பார்க்கப் போகிறோம்” என்றது.
இதையடுத்து மலேசியா தாம் அதுவரை பொத்திக் காத்து வைத்திருந்த ரகசியத்தை அமெரிக்காவுக்கு காட்ட.. மீதியை ஊகித்திருப்பீர்களே.. ஆம், விஷயம் அமெரிக்காவில் லீக் ஆகிவிட்டது.
இவர்கள் பொத்தி வைத்திருந்த ரகசியம் இதோ இதுதான்:

மலேசிய விமானம் ரேடியோ தொடர்பை இழந்த பின்னரும், ‘பிங்கிங்’ தொடர்பை வைத்திருந்தது (இதுபற்றி நாம் விளக்கமாக எழுதியதை பார்க்கவும்).
இந்த பிங்கிங் என்பதை எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், விமானமும், சாட்டலைட்டும் மணிக்கொரு தடவை கைகுலுக்கி கொள்ளும் நடைமுறை. அதாவது, மணிகொரு தடவை விமானம், ‘நான் இருக்கிறேன்’ என்று காட்டிக் கொள்ளும்.
மலேசிய விமானம் காணாமல் போன பின்னரும் சில மணி நேரத்துக்கு இந்த ‘பிங்கிங்’ நடந்திருக்கிறது. மணிக்கொரு தடவை அது பதிவாகியும் உள்ளது. அந்தப் பதிவுகளை ஆராய்ந்தபோது, அவற்றில் ஒரு ‘முற்றுப்பெறாத பிங்’ (partial ping) இருந்ததை கண்டிருக்கிறார்கள்.
இதன் அர்த்தம் அப்போது புரிந்து கொள்ளப்படவில்லை.
அதன்பின் விமானம் மாயமாகி வாரக்கணக்கில் மர்மம் நீடிக்கவே, இந்த ‘முற்றுப்பெறாத பிங்’ பற்றி சற்றே விரிவாக ஆராய்ந்திருக்கிறார்கள். அப்போதுதான், அது வெறும் ‘முற்றுப்பெறாத பிங்’ மட்டுமல்ல, ‘தோல்வியில் முடிந்த ஒரு லாக்-இன் முயற்சி’ (a failed login) என்பதை புரிந்து கொண்டார்கள்.
அதாவது, விமானத்தில் உள்ள சிஸ்டம், சாட்டலைட்டுடன் பிங் பண்ண முயன்று தோற்றது.
அதையடுத்து, அதுவரை பதிவாகிய பிங்குகள் அனைத்தையும் மீண்டும் செக் பண்ணியிருக்கிறார்கள். அவை சரியாக 1 மணி நேர இடைவெளியில் பிங் ஆகியுள்ளன. விமானம் ரேடியோ தொடர்பை இழந்தபின் அப்படி சரியாக 6 பிங்குகள் உள்ளன. இந்த அரைகுறை பிங், ஏழாவது.
அப்போது மற்றொரு விஷயத்தை கவனித்தனர். 6-வது பிங்குக்கும், இந்த 7-வது பிங்குக்கும் இடையே 1 மணி நேரம் இல்லை.
6-வது பிங் முடிந்து சரியாக 8 நிமிடத்தில் 7-வது அரைகுறை பிங் முயற்சி நடந்திருக்கிறது.
அதன் அர்த்தம் என்னவென்றால், 6-வது பிங் முடிந்து 8-வது நிமிடத்தில், விமானத்தின் சிஸ்டம் உருக்குலைந்திருக்கிறது. இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. சிஸ்டம் ரீசெட் பண்ண தாமாகவே முயன்றிருக்கிறது (system to reset itself). ஆனால், ரீசெட் பண்ண முடியவில்லை. அதனால்தான் ‘தோல்வியில் முடிந்த ஒரு லாக்-இன் முயற்சி’ பதிவாகியது.
இதன்பின் எந்தவொரு பிங்கிங்கும் நடைபெறவில்லை!
இதனால், 6-வது பிங் முடிந்து சரியாக 8 நிமிடத்தில் விமானம் தண்ணீரில் மூழ்கியது என்ற ஊகத்துக்கு வந்துள்ளார்கள்.
ஏன் தண்ணீரில் மூழ்கியிருக்க வேண்டும்? தரையில் வீழ்ந்திருக்க முடியாதா?
முடியாது. காரணம், இவர்களது கணிப்பின்படி, 6-வது பிங் இந்தியக் கடலின் தென்பகுதியில் இருந்து வந்துள்ளது. அதிலிருந்து 8 நிமிடங்களில் தரைக்கு போக முடியாது. எனவே தண்ணீரில் மூழ்கியது என முடிவு செய்தார்கள்.
இதுவரை நீங்கள் படித்தது உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். இல்லாவிட்டால் மன்னிக்கவும், இதற்குமேல் இதை எளிதுபடுத்த நம்மால் முடியாது.
இவர்களது கணிப்பு, ஓரளவுக்கு ஊகத்தையும் சேர்த்துக் கொண்டதுதான் என்றாலும், தற்போதுள்ள தரவுகளின் அடிப்படையில் இதுதான் இருப்பதற்குள் உத்தமம்.
இந்திய கடலின் தென் பகுதியில் விமானம் மூழ்கியிருக்க சான்ஸ் உள்ள
viruvirupu.com

கருத்துகள் இல்லை: