புதன், 26 மார்ச், 2014

மிரட்டல் எதிரொலி? மோடிக்கு எதிராக நிறுத்தப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஓட்டம்

வதோதரா : பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடிக்கு எதிராக, காங்கிரஸ் சார்பில், வதோதரா லோக்சபா தொகுதியில் களம் இறக்கப்பட்ட, நரேந்திர ராவத், 'தேர்தலில் போட்டியிட போவதில்லை' என, திடீரென அறிவித்துள்ளார். அவருக்கு பதிலாக, புதிய வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.குஜராத் முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான, நரேந்திர மோடி, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி மற்றும் குஜராத் மாநிலம், வதோதரா ஆகிய, இரு லோக்சபா தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்.வதோதரா தொகுதியில், மோடிக்கு எதிராக, காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த, நரேந்திர ராவத், தேர்தலில் போட்டியிட மறுத்துள்ளார்.ராவத்தின் திடீர் அறிவிப்பை அடுத்து, கட்சியின் பொதுச் செயலர்களில் ஒருவரான, மதுசூதன் மிஸ்திரியை, காங்கிரஸ் மேலிடம், வதோதரா தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளது. மோடிக்கு எதிராக பலமான வேட்பாளரை களம் இறக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், மோடியை எதிர்த்து போட்டியிட்டால் தோல்வி நிச்சயம் என்ற பயத்தில் தான், காங்கிரஸ் வேட்பாளர் பின் வாங்கியிருப்பதாக, பா.ஜ., தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.உ.பி.,யின் வாரணாசியில், மே மாதம், 12ம் தேதியும், குஜராத்தின், வதோதராவில், அடுத்த மாதம், 30ம் தேதியும் தேர்தல் நடக்கிறது.dinamalar.com

ஒரு நாய் மாணவர்களின் முதுகில் ஏறி நடந்தது போல இந்த மோடி மக்களின் முதுகில் ஏறி நடக்கப்போகிறார் ஆப்போது தான் இந்த மக்களுக்கு புத்தி வரும்   

கருத்துகள் இல்லை: