திருப்பூர்
மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கோபியில்
ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
தமிழகத்தில்
நிலவும் மின்வெட்டுக்கு தற்போதைய முதல் அமைச்சர் ஜெயலலிதாவே காரணம்.
கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனையை மாநில அரசு சரியாகக் கையாண்டு
இருந்தால், இந்த மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு கிடைத்திருக்கும்.
சத்தி-சாம்ராஜ்
ரயில் திட்டத்துக்கான ஆய்வுப் பணி முடிவுற்று வேலை துவங்குவதற்காக மத்திய
அரசிடம் கூறி ஏற்பாடு செய்தேன். ஆனால் அப்போது சுற்றுச் சூழல் துறையில்
இருந்த அனுமதி கிடைக்கவில்லை. வனப் பகுதியில் ரயில்வே பாதை அமைத்தால்,
அங்குள்ள விலங்குகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். இயற்கை சூழ்நிலை
கெட்டுவிடும் என்ற காரணத்தினால், அந்தத் திட்டத்தைத் தொடர முடியவில்லை.
திருப்பூர்
மக்களவைத் தொகுதியில் என்னை ஆதரித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா
காந்தி அல்லது ராகுல்காந்தி பிரசாரம் செய்வார்கள். இதற்கான தேதி விரைவில்
அறிவிக்கப்படும் என்றார். nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக