புதன், 26 மார்ச், 2014

அழகிரி பரபரப்பு பேட்டி :நான்தான் திமுக அடித்து சொல்கிறார் !

தி.மு.க.,வே என் கட்சி தான்; என் கட்சியில் இருந்து என் னை யாரும் நீக்க முடியாது; அதற்கு அதிகாரமும் கிடையாது. என் மீது எடுத்த நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடருவேன்; நீதிமன்றத்தில் அவர்களை சந்திப்பேன்,'' என்று, மு.க.அழகிரி தெரிவித்தார்.

தி.மு.க.,வில் இருந்து, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டுள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பரபரப்பு பேட்டி:

தி.மு.க.,வில் இருந்து நீக்கியுள்ளார்களே... உங்களது அடுத்த கட்டம் என்ன?
இப்ப தானங்க கட்டம் கட்டியிருக்காங்க... அதுக்குள்ள அடுத்த கட்டம் பத்தி எப்படி பேச முடியும்.

கட்சி எடுத்த நடவடிக்கையை இவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்கிறீர்களே?
எனக்கென்னங்க பயம்; மடியில கனம் இருந்தா தான பயப்படணும்.

Thiagarajan - Vellore,
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தாச்சி இனி வருவதை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.யாரையும் குறைத்து மதிப்பிடகூடாது. ஏனென்றால் புரட்சி தலைவர் பாணியில எதிரிய வெளியில விடகூடாது. கூடவே வச்சிக்கணும். அப்போ தான் எதிரியால பிரச்சினை எதுவும் வராது. மே மாதம் வரப்போகிற தேர்தல் முடிவுகளிலிருந்து தி.மு.க. தலைமை இதை உணரும் என்பதில் சந்தேகமே வேண்டாம். 


முன்பு இதுபோல் நீக்கினர்; பின் சேர்த்துக் கொண்டார்களே... அதே போல் இப்போதும் நடக்கும் என்கிறீர்களா?

அது எனக்கு தெரியாது. என்னை நீக்க அவங்களுக்கு அதிகாரம் கிடையாது. இது என் கட்சிங்க... என் கட்சியில இருந்து என்னை எப்படி நீக்க முடியும்.

'நோட்டீஸ்'
சரி... நீக்கினதா சொல்றாங்களே அதுக்கு முன்ன ஏதாவது நோட்டீஸ் அனுப்பிருக்காங்களா?
போய் கேளுங்க... விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பணும் முதல்ல... அதுக்கப்பறமா தான் நடவடிக்கை எடுக்க முடியும். இது கூட தெரியாம இருக்கறவங்கள்ட்ட நியாயத்த எப்படி பாக்க முடியும்.

சரி... அதற்கு என்ன செய்ய போகிறீர்கள்?
கோர்ட்டுக்கு போ வேன். 'என்னை நீக்கியது செல்லாது; அதற்கு அவர்களுக்கு அதிகாரம் கிடையாது' என, வழக்கு தொடருவேன். நோட்டீஸ் கூட அனுப்பாம எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்னு கேப்பேன். நீதிமன்றத்துல அவங்கள சந்திப்பேன்.

டிஸ்மிஸ் நடவடிக்கையால், உங்களது அரசியல் எதிர்காலம் பாதிக்காதா?
எப்படி பாதிக்கும்; எதுக்கு பாதிக்கணும்?

அப்படியென்றால், நீங்கள் அறிவித்தபடி உங்களது நடவடிக்கைகள் தொடருமா? அதில் எந்த மாற்றமும் இல்லை. என்னை நீக்கி வைச்சிருக்காங்க. அதேபோல ஒதுக்கி வைச்சிருக்கற கட்சிக்காரரை சந்திக்க, நாளைக்கு ஆரணி போறேன். ஏப்., 2ம் தேதி, தஞ்சாவூர்ல ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்துறேன். அதை சுத்தியுள்ள மாவட்டங்கள சேர்ந்த கட்சிக்காரங்க எல்லாரும்வருவாங்க. 6ம் தேதி, முதுகுளத்தூர்ல கட்சிக்காரங்கள சந்திக்கிறேன். 9ம் தேதி கம்பம், 12ம் தேதி நெல்லை, 13ம் தேதி நாகர்கோவில்னு என்னுடைய பயணம் நடந்துகிட்டே இருக்கும். அதை யாராலும் தடுக்க முடியாது; மாற்றமும் கிடையாது.

கடிதம்:
இந்த நிலையிலும் உங்களது ஆதரவாளர்கள் பின்னால் வருவார்களா?

அதுல எந்த சந்தேகமும் வேண்டாம். இப்போ கூட, என்னைய கட்சிய விட்டு நீக்கறதுக்கு முன்னமே, என்னுடைய ஆதரவாளருங்க, கட்சி தேர்தல் பணிக்குழுவுல இருந்து விலகிட்டாங்க. அந்த கடிதத்தை எல்லாம் எங்கிட்ட வந்து கொடுத்தாங்க. என்கிட்ட ஏன் கொடுக்கிறீங்க... பத்திரிகைக்காரங்ககிட்ட கொடுங்கன்னு சொல்லிருக்கேன்.
உங்களை நீக்கியதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று கருதுகிறீர்கள்?
இதை நீங்க அவங்கட்ட தான் கேக்கணும். எனக்கு தெரிஞ்சு, நான் பல குற்றச்சாட்டுக்கள சுமத்தி இருக்கேன்; அதுதான் காரணமா இருக்கலாம். உட்கட்சி தேர்தல், மாவட்ட செயலர்கள், வேட்பாளர் தேர்வுனு நிறைய குற்றச்சாட்டுகளை சொல்லியிருக்கேன். ஆனா, அந்த குற்றச்சாட்டுக்கு இதுவரைக்கும் யாரும் பதில் சொல்லலை. குற்றம் சொன்ன என் மேல நடவடிக்கை எடுத்திருக்காங்கன்னா என்ன அர்த்தம்? குற்றச்சாட்டுஉண்மைனு தானே அர்த்தம்! தொண்டர்களுக்காக நான் கேட்ட கேள்விக்கு என்ன பதில்? அதை சொல்லாம, கட்சிய விட்டு நீக்கிட்டதா சொன்னாஎப்படி?

இந்த குற்றச்சாட்டுக்கள் நீங்கள் சொல்லி, ரொம்ப நாளாயிருச்சே... இப்போது ஏன் திடீர் நடவடிக்கை?
இதுலயும் பாருங்க... இவ்வளவு நாளா தலைவர் கண்டுக்கல. பிரசாரத்துக்கு போன ஸ்டாலின் நேத்து தான் சென்னைக்கு திரும்பி வந்துருக்கார். அவரு வந்ததும், இந்த நடவடிக்கை வந்துருக்கு. இதுலயிருந்து என்ன தெரியுது? இவர் சொன்னதை கேட்டு நடவடிக்கை எடுத்துருக்காங்க. அந்தளவுக்கு தலைவரை மூளைச்சலவை செஞ்சு வெச்சிட்டாங்க. அதுல இருந்து அவரயும், கட்சியையும் காப்பாத்தணும்.

அதுக்கு என்ன செய்ய போறீங்க?
போகப் போக பாருங்க.

தேர்தல்ல தி.மு.க.,வை எதிர்த்து பிரசாரம் செய்வீர்களா? இனிமே எந்த தடையும் உங்களுக்கு இல்லையே?
நான் தான் தி.மு.க.,னு சொல்றேன்... அப்பறம் எப்படி தி.மு.க.,வை எதிர்த்து பிரசாரம் செய்வேன். அதுபத்தி நான் எந்த முடிவும் செய்யலீங்க. இவ்வாறு, அழகிரி பேட்டி அளித்தார். dinamalar.com

நான்தான் திமுக அடித்து சொல்கிறார் அழகிரி ! 

கருத்துகள் இல்லை: