செவ்வாய், 25 மார்ச், 2014

வாரணாசி: முட்டையை அடுத்து கெஜ்ரிவால் மீது மை வீச்சு

வாரணாசி: முட்டையை அடுத்து கெஜ்ரிவால் மீது மை வீச்சுஉத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி நகரில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை 8.30 மணியளவில் வாரணாசி வந்தடைந்தார். அங்கு பாய்ந்தோடும் கங்கையாற்றில் குளித்த பின்னர், அரசியல்வாதிகளின் ஊழல்களால் கங்கை கூட களங்கப்பட்டுப் போய் விட்டதாக நிருபர்களிடம் கூறிய கெஜ்ரிவால், அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

வாரணாசி நகரின் பிரபல கோயில் வழியாக கார் சென்றபோது, உள்ளே அமர்ந்திருந்த கெஜ்ரிவால் மீது சிலர் முட்டைகளை வீசினர்.


பின்னர், கோயிலில் தரிசனத்தை முடித்துக் கொண்டு, பொதுக்கூட்ட திடலை நோக்கி திறந்த வாகனத்தில் ஊர்வலமாக புறப்பட்டு சென்ற கெஜ்ரிவால் மீது சாலையோரமாக நின்றிருந்த சிலர் கருப்பு நிற மையை வீசினர்.

மையை வீசியவரை பிடிப்பதற்காக கெஜ்ரிவாலின் தொண்டர்களில் சிலர் பாய்ந்தனர். அவர்களை கூட்டத்தில் இருந்த சிலர் தடுத்தனர். இதனால், அந்த இடத்தில் பரபரப்பும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது

கருத்துகள் இல்லை: