புதன், 26 மார்ச், 2014

அ.தி.மு.க.,வுக்கு பிராமணர் சங்கம் ஆதரவு ! பெரிய கொலம்பஸ் கண்டு பிடிச்சான் பாரு ?

சென்னை: பதிவு செய்யப்பட்ட, தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில், லோக்சபா தேர்தலுக்கு, அ.தி.மு.க., கட்சியை ஆதரிப்பது என, முடிவு செய்யப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலை முன்னிட்டு, கடந்த, 23ம் தேதி, திருச்சி, ஸ்ரீரங்கத்தில், மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், லோக்சபா தேர்தலில், சிவகங்கை தொகுதி நீங்கலாக, முதல்வர் ஜெ., தலைமையில் உள்ள அ.தி.மு.க.,வை ஆதரிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது' என, சங்கத்தின் மாநில பொதுச் செயலர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கோரிக்கைகள்:
* டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளில் கலந்து கொள்ளும், முன்னேறிய வகுப்பினருக்கு, பிற்படுத்த வகுப்பினர், மிகவும் பிற்படுத்த வகுப்பினருக்கு கொடுக்கப்பட்டது போல், குறைந்தபட்ச வயது உச்சவரம்பை, 32 வயது வரை, தளர்த்த வேண்டும்.
இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, அனைத்து திருக்கோவில் தக்கார் நியமனத்தில், பிராமண சமூகத்தினருக்கு, வாய்ப்புகள் வழங்க வேண்டும்.

* தமிழக அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், முற்பட்ட சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஏழை மக்களுக்கு, 10 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

* தமிழக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் உதவிகள், முன்னேறிய வகுப்பில் உள்ள, பொருளாதார ரீதியாக நலிந்த மக்களுக்கும் வழங்குவதற்கு பரிசீலனை செய்ய வேண்டும்.  dinamalar.com

கருத்துகள் இல்லை: