புதன், 26 மார்ச், 2014

தேர்தல் வாகன சோதனையில் போலீசுக்கு ஜாக்பாட் ! எட்டுலட்சத்தை அமுக்கிய எஸ் ஐ

வாகனச்சோதனையின் போது சிக்கிய
எட்டு லட்சம் ரூபாயை சுட்ட போலிஸ் எஸ்.ஐ.;
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள முட்டல் கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி, வயது-40, இவர் இவரது ஊரைச்சேர்ந்த 65 தொழிலாளர்களை கூட்டிக்கொண்டு போய் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள தனியார் தொட்ட்டங்களில் மரம் அறுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.இந்த தொழிலாளர்களுக்கான இரண்டு மாத ஊதியம் ரூ.35 லட்சத்தை, முகவர் குப்புசாமியிடம் கொடுப்பதற்காக கேரளாவை சேர்ந்த மரம் வியாபாரி அஜிஸ் திங்கள்கிழமை பிற்பகலில் சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளார்.அவரிடம் ரூ.35 லட்சத்தை குப்புசாமி பெற்றுக் கொண்டு, தனது வேனில் ஓட்டுநர் பாலகிருஷ்ணனுடன் குப்பனூர் வழியாக ஏற்காடு திரும்பியபோது, குப்பனூர் சோதனைச் சாவடியில் வீராணம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சுப்பிரமணி (வயது-50), கோவிந்தன் (வயது-50), இளைஞர் காவல் படையைச் சேர்ந்த பிரபு ஆகியோர் சோதனையிட்டனர்.  
> வேனிலிருந்த பணத்தை பறிமுதல் செய்த அவர்கள் வீராணம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர், தேர்தல் பறக்கும்படையைச் சேர்ந்த அயோத்தியாப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவண்ணனிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் கொடுத்துள்ளனர்.>
வீராணம் காவல் நிலையம் சென்ற தேர்தல் பறக்கும் படையினர், குப்புசாமியையும், அவர் கொண்டு வந்த பணத்தையும் ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் முத்துராமலிங் கத்திடம் ஒப்படைத்தனர். அந்தத் தொகையை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் எண்ணியபோது, ரூ.26.75 லட்சம் இருந்தது.
அனால், குப்புசாமி ரூ.35 லட்சம் கொண்டு வந்ததாகவும், ஆனால், இப்போது ரூ.26.75 லட்சம் மட்டும் இருப்பதாகவும் குப்புசாமி பத்திரிகையாளர்களிடம் புகார் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தின் போது, கூடவே பத்திரிகையாளர்கள் இருந்ததால், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம், டி.ஐ.ஜி. (பொறுப்பு) ஏ.அமல்ராஜ் ஆகியோருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. வீராணம் காவல்நிலையத்துக்கு உடனடியாக வந்த டி.ஐ.ஜி.அமல்ராஜ், குப்புசாமியிடம் விசாரணை நடத்தினார். பணம் கொடுத்தா அறுவை மில் உரிமையாளர் அஜீஷிடமும் விசாரணை மேற்கொண்டனர். பிறகு, வீராணம் காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
மாவட்ட எஸ்.பி. சக்திவேல், ஏ.எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் ஆகியோர் விசாரணை நடத்தியதில், உதவி ஆய்வாளர்கள் கோவிந்தன், சுப்பிரமணி இருவரும், குப்புசாமி இரு பைகளில் கொண்டு வந்திருந்த தொகையில் ஒரு பையில் இருந்த ரூ.8.25 லட்சத்தை தங்களுக்குள் பங்கிட்டு எடுத்துக் கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து, வீராணம் காவல் நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டது. மீதமுள்ள ரூ.4.25 லட்சம் குறித்து, காவல் நிலையத்தில் பணியாற்றும் மற்றொரு உதவி ஆய்வாளர், இளைஞர் படையைச் சேர்ந்த பிரபு ஆகியோரிடம் விசாரணை நடைபெறுகிறது.
பின்னர், இருவரும் கைது செய்யப்பட்டு, சேலம் 4-ஆவது நீதிமன்ற நீதிபதி விஜயலட்சுமியின் வீட்டில் செவ்வாய்க்கிழமை காலை ஆஜர்படுத்தப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து, இருவரையும் பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி. அமல்ராஜ் உத்தரவிட்டார்  nakkheeran.in/

கருத்துகள் இல்லை: