கடலூர்
மாவட்டம் விருத்தாசலத்தில் நடந்த ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்
அறிமுகக் கூட்டத்தில் திமுக மாவட்ட செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
பேசுகையில்,
கட்சிப்
பதவிகளைப் பாதுகாத்துக்கொள்ள நீங்கள் எப்படி எல்லாம் வேலை செய்கிறீர்களோ
அதுபோல, கடலூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் பதவியை திமுக பிடிப்பதற்கு
நீங்கள் பாடுபட வேண்டும். ஏனென்றால் இந்தத் தேர்தல் திமுகவுக்கு வாழ்வா,
சாவா என்பதை தீர்மானிக்கும் தேர்தல்.தேர்தல்
ஆணையம் அதிமுகவுக்கு சாதகமாக செயல்படுகிறது. நாம் எங்கும் கொடிகட்ட
முடியவில்லை. பேனர் வைக்க முடியவில்லை. ஆனால், ஜெயலலிதா பங்கேற்கும்
நிகழ்ச்சிகளுக்கு பலகோடி கணக்கில் செலவிடுகிறார்கள். கொடிகள், தோரணங்கள்
அதிகளவில் வைக்கப்படுகின்றன. கண்ணை பார்த்தாலே தெரியறது ?
இவற்றையெல்லாம் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை.திருமண நிகழ்ச்சி என்பது நமது சொந்த நிகழ்ச்சி அங்குகூட கொடிக்கட்ட கூடாது என்று சொல்கிறார்கள். வியாபாரிகளிடம் சோதனை என்ற பெயரில் பணம் கைப்பற்றப்படுகிறது. இதனால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது.இங்கு நடக்கும் அதிமுக ஆட்சி மக்கள் ஆட்சி போல் இல்லை. மன்னர் ஆட்சி போல் நடைபெறுகிறது. விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு போன்றவை ஏழை மற்றும் நடுத்தர மக்களை பெரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்றார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக