ஞாயிறு, 23 மார்ச், 2014

Tasmac டாžžžஸ்மாக் என்ற பெயரை அம்மா மதுபான கடை அம்மா சொகுசு பார் எனபெயர் மாற்றம் ? மதுக்கடை : எதிர்க்க தயாராகிறது மாணவர் படை!

ஆளும்கட்சிக்கு எதிராக, இந்த தேர்தலில் என்னென்ன விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன என்று பட்டியலிட்டால்...மின் வெட்டு, தொழில் பாதிப்பு, பஸ் மற்றும் மின் கட்டண உயர்வு, அரசுத் துறைகளில் அதிகரித்துள்ள லஞ்சம், வளர்ச்சிப் பணிகளில் தேக்கநிலை, செயல்பாடற்ற அமைச்சர்கள்...என்று நீட்டிக் கொண்டே போகலாம். பலரும் மறந்து விட்ட ஒரு விஷயம்...மக்களை வெறுப்பேற்றும் மதுக்கடைகள்.
தனியாரிடம் உள்ள மதுக்கடைகளை, அரசே நடத்துவது என்ற மாபெரும் கொள்கை முடிவை எடுத்தது, இதே அ.தி.மு.க., அரசுதான்; அதை அப்படியே வழி மொழிந்தது தி.மு.க., அரசு; இரு கட்சிகளுக்கிடையிலும், ஆயிரம் முரண் இருந்தாலும், மதுக்கடை விவகாரத்தில் மட்டும், ரத்தத்தின் ரத்தமாக இணைந்து உடன் பிறப்பாகி விடுவர்.    சபாஷ்.....சாராயமாடி விக்கிறீங்க... ஒங்களுக்கு ஆப்பு அடிக்க இளைஞ்சர் படை தயார் ஆகிட்டு வருது...ஒழுங்கா மூடிட்டு (சாராய கடைகளை) போங்க...சாராயம் விக்கிறவங்க தான் முதல்வர் என்ற நிலைமை ஆகி போச்சு...சாராயம் வித்த காசுலதான் அரசே நடத்த முடியுது....இந்த சாராயம் விக்க வில்லை என்றால் மிடாஸ் என்ற திமுக அதிமுகாவின் கூட்டு நிறுவனம் மூட படும்... அதுக்காகத்தான் மூட மாட்டேன் என்கிறார்கள்...இந்த லட்ச்சனத்துல எலைட் பார் வேற...இங்க லைட்டு கரண்டே இல்லை... அத கவனிக்காம..எலைட் பாரை பெருக்குறாங்க....என்ன நாடோ என்ன ஆட்சியோ... சாராயம் டார்கெட் வச்சு விக்கிற பொம்பளை.. தமிழகத்தின் முதல்வர்...ரொம்ப பெருமையா இருக்கு...தமிழக மக்களே நீங்களும் பெருமை பட்டு கொள்ளுங்கள்...
இதன் காரணமாக, கடந்த பத்தாண்டுகளில், தமிழகம் முழுவதும் மதுக்கடைகளின் எண்ணிக்கையைப் போலவே, குடிகாரர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்து, பல லட்சம் குடும்பங்கள், வீதியில் நிற்கின்றன; இதனால், மதுக்கடைகளை மூட வேண்டுமென்ற கோரிக்கை, மக்கள் மத்தியில் வலுத்து வருகிறது; ஆனால், தற்போதுள்ள ஆட்சியில் வீதிதோறும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.லோக்சபா தேர்தலை முன்னிட்டு, மதுக்கடைகள் மூடப்படுமென்ற அறிவிப்பை ஜெ., வெளியிடுவார் என்ற தகவல், பல மாதங்களாக பரப்பப்பட்டு வந்தது; ஆனால், அது நடக்கவில்லை. மாறாக, மதுக்கடைகளை மூட முடியாது என்று மந்திரியே தெளிவாக முன்பே அறிவித்து விட்டார்.

அரசுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாயையும், கட்சியின் முக்கியத் தலைவர்களுக்கு மது பான நிறுவனங்களின் மூலமாக பல நூறு கோடி ரூபாயையும், கட்சியின் நிர்வாகிகளுக்கு மதுக்கூடங்களின் மூலமாக பல லட்ச ரூபாயையும் வருவாய் ஈட்டித்தரும் மதுக்கடைகளை மூடுவதற்கு அ.தி.மு.க., தலைமை உட்பட கீழ் மட்ட நிர்வாகி வரை யாருக்குமே விருப்பமில்லை.
அதிகரிக்கும் 'குடி'மகன்களால் அதிகம் பாதிக்கப்பட்டது, உழைப்புக்குப் பெயர் பெற்ற கோவை, திருப்பூர் மாவட்டங்களே; வேலைக்குச் செல்லாமலே பிழைப்பதற்கேற்ப விலையில்லா பல திட்டங்களையும் அரசு அறிவித்திருப்பது, இங்குள்ளோரையும் சோம்பேறியாக்கியுள்ளது; கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, விபத்து உட்பட பலவிதமான குற்றங்களுக்கும் 'குடியே' அடிப்படைக் காரணமாக மாறியுள்ளது.இதன் காரணமாக, பொது மக்களிடம் குறிப்பாக, பெண்கள் மத்தியில் அ.தி.மு.க., அரசின் மீது கடுமையான அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனை அக்கட்சிக்கு எதிரான ஓட்டாக மாற்றும் முயற்சியில், மாணவர் படை, களமிறங்கியுள்ளது.

கோவையிலுள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து இதற்காக 'மதுவுக்கு எதிரான மாணவர் இயக்கம்' என்ற அமைப்பைத் துவக்கியுள்ளனர். இதன் ஒருங்கிணைப்பாளராகவுள்ள மாதம்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சிவபிரகாஷ் 21, நம்மிடம் பேசுகையில், ''ஏற்கனவே, இந்த அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம், நடைபயணம், உண்ணாவிரதம் என பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். இந்த தேர்தலில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., ஆகிய இரு கட்சிகளுக்கும் எதிராக பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.படிக்கும் வயதிலே இது எதற்கு என்று யாரும் உங்களைத் தடுக்கவில்லையா என்று கேட்டதற்கு, ''பள்ளியில் படிக்கும் வயதிலேயே பல மாணவர்கள், குடிகாரர்களாக்கியது இந்த அரசுகள்தான்; அதைத் தடுக்க வேண்டுமென்றுதான், மாணவர்களாகிய நாங்கள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளோம்; வீதியில் 'மைக்' கட்டி பிரசாரம் செய்யப்போவதில்லை; வீடு வீடாகச் சென்று மதுவின் கொடுமையை விளக்குவோம்,'' என்றவர், 'பூரண மது விலக்கு; அதுவே எங்கள் இலக்கு' என்று கோஷம் எழுப்புகிறார். அவரது குரலைப் பின் பற்றி, மாணவ, மாணவியர் பலரும் கோஷம் எழுப்ப, அது எட்டுத் திசைகளிலும் எதிரொலிக்கிறது. இதுவே தேர்தலிலும் எதிரொலித்தால்....திராவிடக்கட்சிகளின் நிலை திண்டாட்டம்தான்.


-நமது சிறப்பு நிருபர்-- dinamalar.com

கருத்துகள் இல்லை: