சனி, 27 ஜூலை, 2013

எய்ட்ஸ் சந்தேகத்தில் குழந்தைகள் சுடுகாட்டில் குடியமர்த்தப்பட்ட சோகம்

உ.பி.,யில், பிரதாப்கர் மாவட்டத்தில், ஒரு கிராமத்தில், எய்ட்சால்
பாதிக்கப்பட்டு பலியான தம்பதி யின், ஐந்து குழந்தைகள், கிராம மக்களால் புறக்கணிக்கப்பட்டனர். அவர்களுக்கும், எய்ட்ஸ் பாதிப்பு இருக்கும் என, அஞ்சி, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருக்கும் சுடுகாட்டில், குடியமர்த்தப்பட்டனர்.5 குழந்தைகள் உ.பி., மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில், ஜமுவா கிராமத்தில், ஒதுக்குப்புறமாக உள்ள சுடுகாட்டில், தற்காலிகமாக குடில் அமைத்து, ஒரு சிறுமி உட்பட ஐந்து குழந்தைகள் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். இதில் ஏழு வயது சிறுவனும் அடக்கம். இதில், 17 வயதான சிறுவன்கூறியதாவது:எய்ட்சால் பாதிக்கப்பட்டு என் தந்தை இறந்தார். எங்களை கவனித்து கொண்டு இருந்த தாயும், இரண்டாண்டு கழித்து இறந்தார். அவருக்கும் எய்ட்ஸ் பாதிப்பு இருந்தது.அதன் பின், உறவினர்களுடன் கிராமத்திலேயே வசிக்க, நாங்கள் விரும்பினோம். ஆனால், எங்களுக்கும் எய்ட்ஸ் பாதிப்பு இருக்கும் என்று அஞ்சி கிராமத்தினர், பெற்றோர் புதைக்கப்பட்ட சுடுகாட்டிலேயே, எங்களை தங்க வைத்துள்ளனர்.இவ்வாறு அந்த சிறுவன் கூறினார்.கல்லறை அருகேகடந்த இரண்டு மாதமாக, தங்கள் பெற்றோர் கல்லறை அருகே, தார்பாயால் கூடாரம் அமைத்து, ஐந்து சிறுவர்களும் பொழுதை கழித்துவருகின்றனர். இவர்களுக்கு, கிராம மக்கள் யாராவது தரும் உணவை சாப்பிட்டுவருகின்றனர்.


"எய்ட்ஸ்' இல்லை:

இது பற்றி தகவல் அறிந்ததும், மாநில சுகாதார குழுவினர், சுடுகாட்டுக்கு சென்று, அவர்களைபரிசோதிக்க உள்ளனர்.இவர்களுக்கு, எய்ட்ஸ் பாதிப்பு இல்லை என்று தெரியவந்தால் தான்,கிராமத்திற்குள் அனுமதிப்படுவர் என்றுகூறப்படுகிறது.இதற்கிடையே, இந்த ஐந்து குழந்தைகளுக்கு, உ.பி., அரசு, "இலவச வீடும், வறுமை கோட்டிற்கும் கீழே வசிப்பவர்கள் என்று, ரேஷன் கார்டும் வழங்கப்படும்' என, அறிவித்துள்ளது. என்னதான் அரசு உதவி அறிவித்தாலும், உறவினர்கள், கிராம மக்களின் ஆதரவு இல்லாமல், இந்த உதவிகளை பெற முடியுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது. dinamalar.com

கருத்துகள் இல்லை: