வியாழன், 25 ஜூலை, 2013

மே வங்கத்தில் காங்கிரஸ் , திரிணமூல் கை ஓங்குகிறது இடது சாரிகளுக்கு பின்னடைவு ! கருத்து கணிப்பு

டெல்லி: சி.என்.என்.ஐபிஎன் தொலைக்காட்சி மற்றும் தி ஹிந்து நாளேடு நடத்திய லோக்சபா தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பில் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்களும் இடதுசாரிகளுக்கு பெரும் பின்னடைவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்பானது நாடு முழுவதும் நடத்தப்பட்டது. தமிழகத்தில் அதிமுக, காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிக்கு கூடுதல் இடங்களும் திமுக, தேமுதிகவுக்கு பின்னடைவும் ஏற்படும் என்று இதில் கூறப்பட்டிருந்தது. இதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 42 தொகுதிகள் உள்ளன. 2009ஆம் ஆண்டு இடதுசாரிகள் 43% வாக்குகள் பெற்று 15 இடங்களைக் கைப்பற்றியிருந்தனர். திரிணாமுல் காங்கிரஸ் 31% வாக்குகளுடன் 19 இடங்களையும் 14% வாக்குகளுடன் 6 இடங்களை காங்கிரஸும் 6% வாக்குகளுடன் 1 தொகுதியையும் பாஜக கைப்பற்றியிருந்தது. தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்றால் இடதுசாரிகளுக்கு மிகக் கடுமையான பின்னடைவும் இதர கட்சிகளுக்கு கூடுதல் இடங்களும் கிடைக்கும் என்கிறது கருத்துக் கணிப்பு. அதாவது இடதுசாரிகளின் வாக்கு சதவீதம் 18%ஆகவும் திரிணாமுல் காங்கிரஸின் வாக்கு சதவீதம் 32% ஆகவும் காங்கிரஸுக்கு 22%, பாஜகவுக்கு 12% வாக்குகளும் கிடைக்குமாம். இடதுசாரிகளுக்கு 7 முதல் 11 தொகுதிகளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 23 முதல் 27 தொகுதிகளும் காங்கிரஸுக்கு 5 முதல் 9 தொகுதிகளும் பாஜகவுக்கு 2 தொகுதிகள் வரையும் கிடைக்குமாம். மேலும் மத்திய் அரசில் இருந்து மமதா வெளியேறியது சரி என 23% பேரும், கடந்த 30ஆண்டுகால இடதுச்சாரிகள் ஆட்சியைவிட திரிணாமுல் ஆட்சி சிறப்பாக இருப்பதாக 38% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளாதவர் மமதா என்று 43% பேர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: