வியாழன், 25 ஜூலை, 2013

சினிமாவில் பல பிடிபடாத கிரிமினல்கள் :கொள்ளை அடித்த பணத்தில் 20 லட்சம் கொடுத்து சினிமா நடித்தேன்!

 சென்னை வட பழனி பகுதியில் அடிக்கடி வழிப்பறியில் ஈடுபட்ட பழைய குற்றவாளி செந்தில் என்ற செந்தில் குபேரன் (வயது 32) என்பவரை போலீசார்
தேடி வந்தனர். இவர் திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர். நெல்லையைச் சேர்ந்த இவரை கைது செய்ய உத்தரவிடப்பட்டது.வடபழனி உதவி கமிஷனர் ஜெயசுப்பிரமணியன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் குமரன், சப்–இன்ஸ்பெக்டர் சிவராமன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் செந்தில்குபேரனை தேடி வந்தனர்.நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டன.அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவரது வாக்குமூலத்தில்,  ‘’நான் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தேன். சினிமா வாய்ப்பு முதலில் கிடைக்கவில்லை. இதனால் பிழைப்புக்காக திருட்டு தொழிலை தொடங்கி விட்டேன். இருந்தாலும் சினிமாதான் எனது கனவுதேன். .கொள்ளை அடித்து சம்பாதித்த பணத்தில் ரூ.20 லட்சம் கொடுத்து, சினிமா உலகில் நுழைந்தேன்  விடலைப்பட்டாளம் என்ற படத்தில் கதாநாயகன் வேடம் எனக்கு கிடைத்தது. அதற்கு முன்பு வெண்ணிலா கபடிகுழு என்ற படத்தில் துணை நடிகர் வேடத்தில் வந்துள்ளேன்’’என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர். அவரது வாக்குமூல அடிப்படையில் சினிமா டைரக்டர் ஒருவரையும், மேலும் சிலரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.இவன் ஒரு அடிமட்ட கிரிமினல் ,ஆனால் பல மேல்தட்டு கிரிமினல்கள் மாட்டு படவே மாட்டார்கள், சில வருஷங்களுக்கு முன்பு  ஒரு  வசூல் டைரக்டர் தனது sound  என்ஜினியரை பார்ட்டியில் கூப்பிட்டு ?? , மாட்டு படவே இல்லையே ?

கருத்துகள் இல்லை: