புதன், 24 ஜூலை, 2013

சத்ய சாய்பாபாவின் உறவினர்களுக்கு இடையே சண்டை

சாய்பாபா
The turf war between the relatives of Sri Satya Sai Baba reached its peak with an attack on the residence of M Ganapathy Raju, the first cousin of Satya Sai Baba, by alleged followers of Ratnakar, member of Sri Satya Sai Central Trust and also nephew of Sai Baba, in Puttaparti on Sunday.
The agitators also burnt Ganapathy Raju’s effigy by alleging that he is hurting the sentiments of Satya Sai devotees. Though it was learnt that Raju went to the police station for lodging a complaint over the incident, he did not return home till late in the evening. Meanwhile, rumours were making rounds in Puttaparti about the abduction of Ganapathy Raju by followers of Ratnakar.சத்ய சாய்பாபாவின் உறவினர்களுக்கு இடையேயான சண்டை சமீபத்தில் வன்முறையாக வெடித்திருக்கிறது. சாய்பாபாவின் உறவினரும் சத்ய சாய் அறக்கட்டளையின் உறுப்பினருமான ரத்னாகர் ராஜுவுக்கும் இன்னொரு உறவினரும் அந்த அறக்கட்டளையில் தனது தனது செல்வாக்கு இருக்க வேண்டும் என்று முயற்சித்து வரும் கணபதி ராஜூ என்பவருக்கும் இடையே மோதல் நடந்திருக்கிறது.
கணபதி ராஜு, ரத்னாகரின் சட்ட விரோத செயல்களைப் பற்றி பிரதமர், ஜனாதிபதி முதல் பல்வேறு உயர் பதவி வகிப்பவர்களுக்கு கடிதங்கள் எழுதியிருக்கிறார். அதனால் ரத்னாகர் அவர் மீது கடுப்பாக இருந்திருக்கிறார். பிறகு rajuug1958@yahoo.com என்ற மின்னஞ்சலிலிருந்து அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு 25 லட்சம் பணம் கேட்டு மிரட்டும் மின்னஞ்சல் வந்திருக்கிறது. அது கணபதி ராஜுவின் மின்னஞ்சல் முகவரி rajug1958@yahoo.com யை உட்டாலக்கடி அடித்து உருவாக்கப்பட்ட போலி முகவரி இதைச் செய்தது ரத்னாகாராகத்தான் இருக்கும் என்று கணபதி ராஜு புகார் செய்திருக்கிறார்.
ஜூலை 7-ம் தேதி கணபதி ராஜு வீட்டை சிலர் தாக்கியிருக்கிறார்கள். அது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கச் சென்ற கணபதி ராஜு சில நாட்களுக்கு வீட்டுக்குத் திரும்பவில்லை. இதற்கிடையில் ரத்னாகர் கோஷ்டியைச் சேர்ந்த ஒருவரை (ஸ்ரீபிரசாத்) கணபதி ராஜு தாக்கியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கணபதி ராஜு ஜூலை 14-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை கைது செய்யப்பட்டார்.


1993-ம் ஆண்டு ஆசிரமத்தில் 6 பேர் மர்மமாக கொலை செய்யப்பட்டனர். அவர்கள் பாபாவை கொலை செய்ய வந்தவர்கள் என்று சொல்லப்பட்டு உண்மைக் காரணம் மறைக்கப்பட்டு வழக்கு மூழகடிக்கப்பட்டது. இவ்வ்வளவு கொலை நடந்தாலும் அரசு, அதிகார வர்க்கம், அரசியல்கட்சிகள் ஆதரவு காரணமாக  உலா வரமுடிந்தது.

சத்ய சாயி அறக்கட்டளைக்கு ஆண்டு தோறும் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான காணிக்கைகள் வந்தன. அதன் மூலம் பணப் பரிமாற்றங்களுக்கான மையமாக புட்டபர்த்தி மாறியது. சாய் பாபாவின் இறப்புக்குப் பிறகு புட்டபர்த்தி ஆசிரமத்தில் அவரது அறையிலிருந்து இருந்து ரூ 21 கோடி மதிப்பிலான 98 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டிருக்கின்றன. மேலும் ரூ 1.6 கோடி மதிப்பிலான 307 கிலோ வெள்ளி நகைகள், ரூ 11.6 கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. அடுத்த மாதம் மற்ற அறைகளிலிருந்து 77 லட்ச ரூபாய் பணம், 1000 பட்டுச் சேலைகள், வேட்டிகள், சட்டைகள், 500 ஜதை செருப்புகள், பெர்ப்யூம்கள், ஹேர்ஸ்ப்ரே, வாட்சுகள், தங்க, வெள்ளி தாலிகள், வைரங்கள். 750 காவி, வெள்ளை உடைகள் எடுக்கப்பட்டன. கண் இமைக்கும் நேரத்தில் தன் கையில் பொருட்களை தோன்றச் செய்யும் கடவுளின் அவதாரம் இத்தனை பொருட்களையும் சேர்த்து வைத்தற்கு என்ன காரணம் என்று பக்தர்கள் யோசிக்க வேண்டும்.
 அதே போன்று பெங்களூர் வொயிட் ஃபீல்டில் உள்ள ஆசிரமத்தில் இருந்து 6 கிலோ தங்கம், 245 கிலோ வெள்ளி., 80 லட்சம் ரூபாய் ரொக்கம் எடுக்கப்பட்டது.
குவிந்து கொண்டிருந்த பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தில் சிறு பகுதியை மருத்துவமனை, கல்லூரி, குடிநீர்த் திட்டம் என்று செலவழித்து ஆசிரமத்தின் செயல்பாட்டுக்குத்  சத்ய சாய் பாபாவும் அவரது அறக்கட்டளையும்.
2003-ம் ஆண்டு ஸ்டூலில் ஏறி நின்ற ஒரு பையன் அவர் மீது விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டு சாய்பாபா இயல்பாக நடமாட முடியாமல் போய் விட்டது. 2004 முதல் பொதுவில் வந்து அருள் பாலிப்பது குறைந்து விட்டது. அதன் பிறகு சில ஆண்டுகள் உயிரைப் பிடித்து வைத்துக் கொண்டிருந்த 2011-ம் ஆண்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
 பக்தர்கள் குறித்து அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார் சாய்பாபா. அவரது இறப்புக்குப் பிறகு அப்படி விளம்பரப்படுத்தலுக்கு தேவை இல்லாமலேயே அவரது உறவினர்களின் சொத்துச் சண்டை அந்த மோசடி விவகாரங்களை தெருவில் இழுத்து விட ஆரம்பித்திருக்கின்றன.
வாரிசுரிமைச் சண்டைகளுக்காக உடன்பிறந்தோரையும் கொல்வதற்கு தயங்கமாட்டார்கள் என்று முகலாய மன்னர்களை கேலி செய்யும் சங்கபரிவாரத்தினருக்கு ஆதரங்களோடு வருகிறார்கள் இந்து கார்ப்பரேட் சாமியார்கள். vinavu.com
- பண்பரசு

கருத்துகள் இல்லை: