வியாழன், 25 ஜூலை, 2013

மோடிக்கு கடும் எதிர்ப்பு, அறிஞர் அமர்த்தியா சென்: மதநல்லிணக்கத்துக்கு எதிரான மனிதரை எப்படி நாட்டின் பிரத மராக ஏற்க முடியும்?


 குஜராத் முதல்வர் நரேந் திர மோடி பிரதமராக வருவதை ஏற்கமுடியாது என நோபல் பரிசு வென்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் அறிவித்துள்ளார்.
நரேந்திர மோடிதான் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்பதை யும் கிட்டத்தட்ட அறி வித்துவிட்டது பாஜக. மோடியை முன் நிறுத் துவதை பாஜவுக்குள் ளேயே ஒரு பிரிவினர் எதிர்த்து வரும் நிலை யில், நாட்டின் சமூக ஆர்வலர்கள், மத நல்லி ணக்கவாதிகள், பொரு ளாதார அறிஞர்கள் என பல மட்டங்களி லும் மோடிக்கு கடும் எதிர்ப்பு வலுத்து வரு கிறது.
நோபல் பரிசு பெற்ற இந்தியப் பொருளாதார அறிஞரான அமர்த்தியா சென் கடுமையாக எதிர்த் துள்ளார் மோடியை. அவர் அளித்த பேட்டியில்,
மதநல்லிணக்கத்துக்கு எதிரான ஒரு மனிதரை எப்படி நாட்டின் பிரத மராக ஏற்க முடியும்? ஒரு இந்தியக் குடிமகன் என்ற முறையில் அவர் பிரதமராவதை நான் கடு மையாக எதிர்க்கிறேன். சிறுபான்மை மக்கள் தாங்கள் பாதுகாப்பு டன் இருக்கிறோம் என உணரும் வகையில் அவர் எதையுமே சொல்ல வில்லை. சிறுபான்மை யினருக்கு மட்டும் என் றல்ல... நான் சிறுபான் மையில் ஒருவன் இல்லை... பெரும் பான்மை மக்களுக்கும் கூட அவர் என்ன செய்துவிட்டார்? வன்முறைக்குச்சட்ட அங்கீகாரமா?

2002 இல் அவர் செய் தது திட்டமிட்ட வன் முறை. மோடியை அங் கீகரிப்பதன் மூலம் அந்த வன்முறைக்கு சட்ட அங்கீகாரம் தரப்போகி றார்கள் என்றுதான் அர்த்தம்.
இந்திய பிரதமராக விரும்பும் எந்த இந்திய குடிமகனுக்கும் இல்லாத பயங்கரமான வன்முறை பின்னணி மோடிக்கு உள்ளது. அவரை ஏற்கக் கூடாது.குஜராத்தில் சில உள்கட்டமைப்புகள் நன்றாக இருக்கலாம். ஆனால் கல்வி மற்றும் சுகாதாரத்தில் அந்த மாநி லம் கடந்து வர வேண்டிய தூரம் நிறைய உள்ளது.
சகிப்புத் தன்மையில் நீண்ட பாரம்பரியம் கொண்ட இந்தியாவில், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான நிலை உள்ளது என பெரும் பான்மை மக்கள் எண் ணுமளவுக்கு மோடி நடந்து கொள்ளவில்லை என்றார்

கருத்துகள் இல்லை: