Italy-born Odissi and Chau dancer and Padma Shri awardee Ileana
Citaristi was allegedly beaten up by two servitors atop the chariot of
Lord Jagannath in Puri, about 65 km east of Bhubaneswar, on Sunday.The
noted dancer, who has made Odisha her home since 1979, said the two
temple attendants slapped and shoved her down the chariot in the morning
after she refused to pay them
பூரி: ஒடிஷாவில் இத்தாலியைச் சேர்ந்த ஒடிசி நாட்டியக் கலைஞர் இலியானா
சிடாரிஸ்டி பூரி ஜெகந்நாதரை அருகில் சென்று தரிசிக்க பணம் கொடுக்காததால்
தாக்கப்பட்டுள்ளார்.
இத்தாலியைச் சேர்ந்த ஒடிசி நாட்டியக் கலைஞர் இலியானா சிடாரிஸ்டி. ஒடிசி
நாட்டியத்தில் அவரது பங்களிப்பை பாராட்டி இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ
விருது வழங்கி கௌரவித்துள்ளது. இலியானா ஒடிஷா மாநிலத்தில் உள்ள பூரி
ஜெகந்நாதர் கோவில் திருவிழாவுக்கு சென்றுள்ளார். ஜெகந்நாதர் சிலை ஊர்வலம்
வந்துள்ளது. அப்போது சாமியை தரிசிக்க தேருக்கு அருகில் இலியானா
வந்துள்ளார்.
அப்போது அவரும், அவரது மாணவி ஒருவரும் பூசாரிக்கு தலா ரூ.20 கொடுத்துவிட்டு
தேரில் ஏறியுள்ளனர். ஆனால் அவர்கள் சாமி சிலை அருகே சென்றபோது அங்கு
இருந்த பூசாரி ஒருவர் ரூ.1,000 கேட்டுள்ளார். அவர் கேட்ட பணத்தை தர
மறுத்ததால் அவர் இலியானாவை தாக்கியுள்ளார். இது குறித்து இலியானா கோவில்
நிர்வாகத்திடம் புகார் கொடுத்தார்.
அவர் தனது புகாரில் தேரில் இருந்த பூசாரி தன்னை 3 முறை தாக்கியதோடல்லாமல்
வெளிநாட்டவர், வெளிநாட்டவர் என்று சத்தம் போட்டார் என்று தெரிவித்துள்ளார்
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக