புதுடில்லி:சமாஜ்வாதி தலைவர், முலாயம் சிங் யாதவ் மீதான சொத்து குவிப்பு
வழக்கை, "போதிய ஆதாரங்கள் இல்லை' எனக் கூறி, வாபஸ் பெற, சி.பி.ஐ.,
திட்டமிட்டுள்ளது.சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ், அவரது மகனும், தற்போதைய உ.பி., முதல்வருமான, அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாகக் கூறி, விஸ்வநாத் சதுர்வேதி என்ற வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட்டில், 2007ல், மனு தாக்கல் செய்தார்துவக்கத்திலேயே மந்தம் :இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டது. ஏழாண்டுகளாக, சி.பி.ஐ., இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை, அவ்வப்போது வேகம் காட்டினாலும், பெரும்பாலான நாட்களில், மந்தமாகவே இருந்தது. இந்நிலையில், முலாயம் சிங் யாதவ் மீதான சொத்து குவிப்பு வழக்கை, கைவிட, சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து, சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது: இந்த வழக்கு தொடர்பாக, முலாயம் சிங் யாதவ், அவரது மகன்கள் அகிலேஷ், பிரதீக் மற்றும் அகிலேஷின் மனைவி டிம்பிள் ஆகியோருக்கு எதிராக, விசாரணை நடத்தப்பட்டது. சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலின்படி, டிம்பிளுக்கு எதிரான விசாரணை, ஏற்கனவே கைவிடப்பட்டது.
முதல்கட்ட விசாரணையின்படி, முலாயம் மற்றும் அவரின் குடும்பத்தினரின் சொத்து மதிப்பு, பல மடங்கு அதிகரித்துள்ளது தெரிய வந்தது. ஆனால், வங்கிகளிலிருந்து பெற்ற கடன், தங்களுக்கு வந்த பரிசு ஆகியவற்றின் மூலமாகவே, சொத்து மதிப்பு உயர்ந்ததாக, முலாயம் தரப்பு கூறியது.குறிப்பாக, 1993 - 2005ம் ஆண்டுகளில், முலாயம் குடும்பத்தினரின் முதலீடு, பல மடங்கு அதிகரித்துள்ளது. இருந்தாலும், அதிகரித்த, அவர்களின் சொத்து மதிப்பு மற்றும் முதலீடு பற்றிய, துல்லியமான விவரங்களோ, அதற்கான ஆதாரங்களோ, எதுவும் கிடைக்கவில்லை.எனவே, முலாயம் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீதான, சொத்து குவிப்பு வழக்கை, வாபஸ் பெற, திட்டமிடப்பட்டுள்ளது. சி.பி.ஐ., இயக்குனர், ரஞ்சித் சின்கா, இதற்கான முடிவை, விரைவில் அறிவிப்பார்.இவ்வாறு, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.
சி.பி.ஐ., மூத்த அதிகாரிகள் கூறுகையில், "முலாயம் மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக, இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை' என்றனர்.இதற்கிடையே, உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு ஆதரவு பெறுவதற்காகவே, முலாயம் மீதான சொத்து குவிப்பு வழக்கு, வாபஸ் பெறப்படுவதாக, மத்திய அரசு மீது, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. dinamalar.com

அதிகரித்த சொத்து:

முடிவு எடுக்கவில்லை :
சி.பி.ஐ., மூத்த அதிகாரிகள் கூறுகையில், "முலாயம் மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக, இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை' என்றனர்.இதற்கிடையே, உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு ஆதரவு பெறுவதற்காகவே, முலாயம் மீதான சொத்து குவிப்பு வழக்கு, வாபஸ் பெறப்படுவதாக, மத்திய அரசு மீது, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக