செவ்வாய், 23 ஜூலை, 2013

பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் மீண்டும் தி.மு.க. பிரமுகர்களிடம் விசாரணை

பொட்டு சுரேஷ் கடந்த ஜனவரி மாதம் தனது வீட்டு அருகே படுகொலை செய்யப்பட்டார். இதில் அட்டாக் பாண்டி உள்பட 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அட்டாக் பாண்டியை தவிர மற்றவர்கள் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ளனர். அட்டாக் பாண்டி தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகிறார்.
இந்தநிலையில் தமிழகம் முழுவதும் அரசியல் படுகொலைகள் நடந்துவருவதால், மாநில டிஜிபி அலுவலகத்தில் இருந்து வாய்மொழி உத்தரவாக அனைத்து மாவட்ட போலீஸ் எஸ்.பி., கமிஷனர்களுக்கு அரசியல் தலைவர்கள் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அந்த வழக்குகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.


இதையடுத்து பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் அட்டாக் பாண்டி தலைமறைவாக இருப்பதால், அவருக்கு நெருக்கடி கொடுக்க அவரது மனைவி, மாமனார், சகோதரன் ஆகியோரை கைது செய்த போலீசார் அடுத்தக்கட்டமாக திமுக முக்கிய பிரமுகர்களை விசாரிக்க சம்மன் வழங்கி ஆஜராகும்படி நெருக்கடி கொடுத்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திய சுப்பிரமணியபுரம் போலீசார் அட்டாக் பாண்டியை உடடினயாக சரண் அடைய சொல்லுங்கள் இல்லையென்றால் மீண்டும் நெருக்கடி கொடுக்கப்படும் என்று மிரட்டியுள்ளதால் இந்த வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: