
The police had confirmed that the meals contained pesticides. Five packets of pesticide carbofuran were also recovered from the house of Meena Devi.
பீகார் மாநிலம் சரண் மாவட்டம் தர்மசதி கந்தவான் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கடந்த 16ம் திகதி இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சாப்ரா நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சில மாணவர்கள் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவமானது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இது குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு ஆணை பிறப்பித்துள்ளார் இதனைத் தொடர்ந்து தடவியல் நிபுணர்கள் மதிய உணவின் மாதிரிகளை ஆய்வகத்திற்கு எடுத்து சென்று சோதனை செய்து அதன் அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
தடவியல் நிபுணர்கள் தாக்கல் செய்த அறிக்கையில், மதிய உணவில் பூச்சி மருந்து கலந்திருப்பதற்கான அடையாளங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விலங்குகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மோனோகுரோட்டோபாஸ் என்ற பூச்சிக் கொல்லி மருந்தானது கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சமையல் செய்தவர்கள் உணவில் சமையல் எண்ணெய்க்கு பதில் பூச்சி மருந்தை ஊற்றியிருக்கலாம் என கருதப்படுகின்றது.
இதுகுறித்து பாட்னா ஏடிஜிபி ரவீந்திர குமார் கூறுகையில், மதிய உணவில் பூச்சி மருந்தின் அளவானது அதிகமாக கலந்துள்ளது, எனவே இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பள்ளியின் முதல்வர் மீனா தேவி தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றியபோது கெட்ட நாற்றம் வந்துள்ளது. இதனை சமையல்கார பெண், மீனா தேவியிடம் கூறியிருக்கிறார். ஆனால் புகாரை காதில் வாங்காமல் அந்த எண்ணெய்யையே பயன்படுத்துமாறு மீனாதேவி கூறியிருக்கிறார்.
எனவே முதல்வர் மீனாதேவி மீது கவனக்குறைவு குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பின்பு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவின் தரத்தினை கண்காணிப்பதற்கு சிறப்புக் குழுவை அமைப்பது குறித்து மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.newindianews.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக