அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோத மாகப் படகுகள் மூலம் சென்றவர்களில் இதுவரை
1500 ற்கும் அதிகமானவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக அவுஸ்திரேலிய
தகவல்கள் தெரிவிக்கின்றன. 2000 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையான காலப்
பகுதியிலேயே இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. 2000 ஆம் ஆண்டு முதல் 2007
ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் 746 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
இவர்களில் 363 பேர் கடலில் மூழ்கியிருப்பதுடன் 350 பேர் தொடர்ந்து காணாமல்
போனவர்களின் விபரங்களில் உள்ளடக்கப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய செய்திகள்
தெரிவிக்கின்றன. இவர்களில் 22 பேர் தடுப்பு முகாம்களில்
உயிரிழந்திருப்பதுடன் 11 பேர் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பிய பின்னர்
கொல்லப்பட்டிருப்பதாக அச் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக