எப்போது நாம் நாகரிகமடைவது?
ஏனைய சமூகத்தவர்களை, ஏனைய பார்வைகளை ஏனைய பேச்சுக்களை சகித்துக்கொள்ளாமையும் அவற்றை மறைக்க முற்படுதலுமே நம் ஊடக அரசியல் கலாசாரமாக இருக்கிறது. நம்மைத் தவிர்ந்த மற்றவர்களை (மற்றவற்றை) நம்மைவிட மட்டமாக நினைப்பதும், இழித்து ஒதுக்குதலும் நமது மரபாயி ருந்துவரும் பழக்கங்களிலொன்று என்பது தெரிந்ததே. அது இவ்வளவு உலக மாற்றங்களுக்குப் பிறகும் இன்றும் தொடர்கிறது. வடக்கத்தியான், மோட்டுச் சீனா, தொப்பி பிரட்டி, காப்பிலி, பறங்கி,இதுவரைகாலமும் புலம்பெயர்ந்த நாடுகளில் மட்டும் நடை பெற்று வந்த இலக்கியச் சந்திப்பின் 41-வது மாநாடு முதன்முறையாக இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. கடந்த சனியும் ஞாயிறும் யாழ்ப்பாணம் அக்றேறியன் லேனில் உள்ள யூரோவில் மண்டபத்தில் இந்த இலக்கியச் சந்திப்பின் ஒவ்வொரு நாளும் சுமார் இருநூறு பேர்வரையில் வந்து கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டின் சகல பகுதிகளிலுமிருந்து வந்திருந்த இலக்கிய ஆர்வலர்களும் எழுத்தாளர்களும் பண்பாடு, சாதியம், இலக்கியம், தேசிய இனங்கள்-பிரச்சினைகள் ஆகிய தலைப்புகளில் பல மணிநேர விவாதங்களை நடத்தியிருந்தனர். பல புதிய கருத்துக்களும் நெஞ்சைத் தொடும் அனுபவப்பகிர்வுகளும் ஒவ்வொரு அமர் விலும் வெளிப்பட்டன.
முஸ்லிம் தேசியம், மலையகத் தேசியம் ஆகியவற்றின் முகிழ்ப்பின் பின்னுள்ள காரணிகள், சிங்களத் தேசியத்தின் எண்ணப்பாடுகள் குறித்த சிங்கள வளவாளர்களின் பகிர்வுகள், தமிழ்த் தேசியம் பற்றிய விசாரணை, சாதியம், பெண்களின் நிலை, வரலாற்று விடுபடல்கள், பண்பாட்டுருவாக்க நெருக்கடிகள் குறித்தெல்லாம் விரிவான பலதரப்பு விவாதங்கள் நடத்தப்பட்டன.
ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்தியாவிலிருந்து இந்து ஆங்கில நாளிதழ், லண்டனிலிருந்து பிபிசி போன்றவை எல்லாம் இந்த இலக்கியச் சந்திப்பு பற்றி செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் தமிழ் ஊடகங்களில் இப்படி ஒரு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடந்து முடிந்ததற்கான அடையாளத்தையே காணக்கிடைக்கவில்லை. அதிலும் யாழ்ப்பாண ஊடகங்கள் கண்ணை மூடிக்கொண்டது ஏன் என்று யோசித்தால்தான் எங்கள் பத்திரிகா தர்மங்கள் ஊடக நடுவுநிலைமை எல்லாம் ஓடிவெளிக்கின்றன.
மற்றவர்களின் கதையை காதுகொடுத்துக் கேட்கவே விரும்பாத போக்கும், மற்றவர் கதியை நினைத்தே பார்க்க விரும்பாத தன்மோகமும் தான் எங்கள் சமூகத்தை இன்னும் வழிநடத்து வதாகத் தெரிகிறது.
ஏனைய சமூகத்தவர்களை, ஏனைய பார்வைகளை ஏனைய பேச்சுக்களை சகித்துக்கொள்ளாமையும் அவற்றை மறைக்க முற்படுதலுமே நம் ஊடக அரசியல் கலாசாரமாக இருக்கிறது. நம்மைத் தவிர்ந்த மற்றவர்களை (மற்றவற்றை) நம்மைவிட மட்டமாக நினைப்பதும், இழித்து ஒதுக்குதலும் நமது மரபாயி ருந்துவரும் பழக்கங்களிலொன்று என்பது தெரிந்ததே. அது இவ்வளவு உலக மாற்றங்களுக்குப் பிறகும் இன்றும் தொடர்கிறது. வடக்கத்தியான், மோட்டுச் சீனா, தொப்பி பிரட்டி, காப்பிலி, பறங்கி, பாம்புதின்னி என்பவையெல்லாம் ஏனைய சமூகத்தைச் சேர்ந் தவர்களை விளிப்பதற்காக நாம் ஏற்கனவே தமிழில் வைத்திருக்கும் வார்த்தைகள் என்பதில் அதிசயமென்ன? இதிலுள்ள பாசிஸ மனோநிலையை இன்னும் உணராதவர் களாகவே நம்மில் பலர் இன்றும் இதே பாணியில் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் நினைத்துக்கொண்டும் இருக்கிறார்கள். அதையே தமிழ்ப் பெருமையாகவும் எண்ணிக்கொள்ளும் கடந்த காலத்தவர்களாக மாறாமனிதர்களாய் இன்னுமிருக்கிறோம்.
ஒருபடி மேலே போய், அந்த சமூகங்கள் நாம் நினைத்தமாதிரி நடக்கவில்லை என்றால், மிரட்டுவதும் சாபமிடுவதும் குதிப்பது மாக மிகக் கேலிக்கிடமாகவும் நடந்துகொள்கிறோம். நம்மை நாமே உயர்வாய் நினைத்துக்கொண்டு பிறரை விலக்குதல் மிரட் டுதல் ஒழித்துவிடுதல் என்ற எண்ணப்பாங்கிலேயே இன்னமும் நமது ஊடகங்களும் ஆதிக்க அரசியலாளர்களும் செயற்பட்டு வரு வதை அவதானிக்க முடிகிறது.
இங்கு பலர் இப்போதும் இனவாதத்தன்மை மாறாமலேயே சிந்திக்கிறார்கள்; எழுதுகிறார்கள். அதிலுள்ள அறக்கீழ்மை பற்றிய புரிதலும் குற்றவுணர்வும் கூட இல்லை. ம்… எப்போது நாகரிகம டைந்த மனித சமுதாயங்களில் ஒன்று என நாமும் ஆகப்போகி றோம்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக