பாஜகவோ காங்கிரசோ அறுதி பெரும்பான்மை பெறபோவதில்லை மேலும் இடதுசாரிகள் உள்ளிட்ட மூன்றாவது அணியினர் கணிசமான அளவு இடங்களை கைப்பற்றுவர் பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்க வேண்டியாவது காங்கிரஸ் ஏனையவர்களுக்கு ஆட்சி அமைக்க ஆதரவு கொடுக்க வேண்டிய நிலை உள்ளது . காங்கிரசுக்கும் இடது சாரிகளுக்கும் இசைந்தவராக தற்போது முலாயம் சிங்கே தெரிகிறார்
டெல்லி :லோக்சபா தேர்தலில் கூடுதல் இடங்களை கைப்பற்றினால் சமாஜ்வாடி
கட்சித் தலைவர் முலாயம்சிங் பிரதமர் வேட்பாளராக உருவாக வாய்ப்பு உள்ளது
என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் பிரகாஷ் காரத்
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், வரும் லோக்சபா தேர்தலில் சமாஜ்வாடி கட்சி
தீர்மானிக்கக் கூடிய சக்தியாக விளங்கும். முலாயம்சிங் ஏற்கெனவே
இடதுசாரிகளுடன் இணைந்திருந்தவர். தேர்தலில் அவரது கட்சி அதிகமான இடங்களைப்
பெற்றால் முலாயம்சிங் பிரதமர் வேட்பாளராக உருவாகலாம்.
காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகளை ஒன்றிணைக்கும் இடதுசாரிகளின் முயற்சி
தொடரும். தற்போதைய நிலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் தேசிய
ஜனநாயகக் கூட்டணியும் பலவீனமாகவே இருக்கின்றன. நரேந்திர மோடியை பாரதிய ஜனதா
முன்னிறுத்தினால் அது அக்கட்சியின் மதவாத முகமாகவே வெளிப்படும். குஜராத்
மாநிலம் ஒன்றும் வளர்ச்சி அடைந்துவிடவில்லை என்றார்.
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக