வெள்ளி, 3 மே, 2013

சமுக விரோதிகள் என்றால் யார் ? இனியும் வேண்டுமா விளக்கம் ?

யாருடைய பஸ்ஸை கொளுத்துகிறார்கள்? யாருடைய மரத்தை
வெட்டுகிறார்கள்? யாருடைய பொதுசொத்தை நாசபடுத்துகிரார்கள்? வன்முறையார்களே தயவு செய்து யோசியுங்கள்? எல்லாம் நமது தமிழ்நாட்டு பொது சொத்து. நம்ம வீட்டு சொத்தை நாமே கொளுத்துவது போன்று இருக்கிறது இவர்களின் செயல். நாளை ராமதாசா பஸ்ஸில் போகபோகிறார்? நாம்தானே போக வேண்டும். நமக்கு நிழல் கொடுக்க நம் முன்னோர்கள் கஷ்டப்பட்டு நட்டு வைத்த மரத்தை இப்படி வெட்டி போடலாமா? மரத்திற்கும் உயிர் உண்டு. அவற்றை அனாவசியமாக வதைக்கலாமா? நாம் என்ன அந்நிய நாட்டின் பாலத்தையா தகர்த்துவிட்டோம் சந்தோஷப்பட. நாளை ஒரு மருத்துவ அவசரத்திற்கு செல்ல வேண்டுமெனில், அந்த பாலம் இல்லாமல் கஷ்டப்பட போவது யார்? ராமதாசா? ஏன் இந்த வெறி ஆட்டம்? வறட்டு கவுரத்தால், நம்மை நாமே அழித்து கொள்வது எந்த விதத்தில் தகும்?


vijayadhiraaj - chennai,இந்தியா
மனிதாபிமானமே இல்லாத இது போன்ற தலைவர்களுக்கு  எல்லாம் யார் டாக்டர் பட்டம் கொடுத்தது? பொது சொத்தை செதபடுத்தும் அமைப்புகளிடம் இருந்து அதற்க்கான நஷ்ட்ட ஈடை அந்த கட்சிகளிடம் இருந்து வாங்க வேண்டும். வன்னியர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்காக ராமதாதாஸ் ஒரு துரும்பை கூட கில்லி போடவில்லை என்பதே நிஜம். உங்களின் இட ஒதுகீட்டிர்க்காக உயிர் விட்ட 21 குடும்பகள் இன்னும் வறுமையில் தான் வாடுகின்றன. அனால் ராமதாஸ் திராவிட கட்சிகளிடம் கூட்டு வைக்கமாட்டேன் என்று கூறிக்கொண்டே அவர்களிடம் பெட்டி வாங்கி கொண்டு கூட்டணி வைத்து கோட்டீஸ்வரர் ஆகிவிட்டார். உங்கள் சின்ன ஐயா அடிக்கடி ஐரோபிய நாடுகளுக்கு செல்வதே தன் வெளி நாட்டு வங்கி கணக்குகளை சரிபார்ப்பதர்க்குதான். வீரப்பனை எதோ இவர்தான் வளர்த்து விட்டவற்போல் உதார் விடும் ராமதாஸ், வீரப்பனின் மனைவி அளித்த பேட்டியை பார்க்கவில்லை. இவரிடம் உதவி கேட்டு வீரப்பனின் மனைவி மற்றும் மகள்கள் தைலாபுரம் சென்ற போது மிக கேவலமாக பேசி வீட்டை விட்டு துரத்தி இருக்கிறார். திராவிட கட்சிகள் செய்த மிக பெரிய தவறு இது போன்ற கள்ளி செடிகளை வளர்த்து விட்டதுதான். குறிப்பாக MGR , கலைஞர் போன்றோர் அப்போதே மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இவர் இந்த அளவிற்கு ஆட மாட்டார். முதல்வர் இவரை சும்மா விட கூடாது. அணைத்து கலவரங்களுக்கும், படுகொலைகளுக்கும் இவர் மீது வழக்கு போட்டு ஆயுள் தண்டனை வாங்கி தரவேண்டும். இனி எவனும் புரதான சின்னங்கள் அமைந்திருக்கும் இடங்களில் கூடி நின்று பேச கூட அனுமதி வழங்க கூடாது. இவர்களின் கட்சி  அங்கிகாரத்தை ரத்து செய்ய வேண்டும். உள்ளூர் தமிழனுக்கே இவரால் ஒன்றும் கிழிக்க முடியவில்லை. இதில் இவர் இலங்கை தமிழர் விவகாரம் பற்றி வேறு பேசுவார். இவரின் குடும்ப சொத்துக்களை பற்றி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்

Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

ராமதாஸ் என்னை கைது செய்து பார் என்று கொக்கரித்தது இதற்கு தான். தன்னுடைய மாவட்ட செயலர்களுக்கு தான் கைது செய்ய பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லி விட்டு தான் அவர் கூட்டத்துடன் சென்றதே இப்படிப்பட்ட நிலையில் ஒன்று தான் செய்யலாம். அங்கே ஒரு பஸ் எறிந்தாலும் உன்னுடைய ஒரு காலை உடைப்பேன் என்று போலிஸ் கட்டையுடன் ராமதாஸ் பக்கத்தில் உட்கார்ந்து இருப்பதுதான் நலம். மாற்று வழியாக அனைத்து காவல் நிலையங்களையும் அந்தந்த பகுதிகளில் ரோந்து வர செய்யலாம்.

கருத்துகள் இல்லை: