பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கடந்த மூன்று
நாட்களாக வட மாவட்டங்களில் வன்முறை தலைவிரித்து ஆடுகிறது. அரசு பேருந்துகள் தாக்கப்பட்டு வந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பாலம் ஒன்றிற்கு, குண்டு வைக்கப்பட்டது.
இந்த சம்பவம், வட மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் கரசானூர் – பெரும்பாக்கம் இடையே உள்ள சித்தேரி வாய்க்காலின் மீது இந்தப் பாலம் உள்ளது. பாலத்திற்கு அடியில் நீர் வடியும் வகையில் அதன் கீழ் 38 குழாய்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதில், 19 குழாய்களில் கல் குவாரிகளில் பாறைகளை உடைக்க பயன்படும் வெடி மருந்தை அடைத்து அதிகாலையில் வெடிக்க வைத்துள்ளார்கள்.
இதனால், பாலத்தின் மேல் பகுதியிலுள்ள சாலையில் விரிசல் ஏற்பட்டது. விழுப்புரம் எஸ்.பி. மனோகர், உட்பட காவல்துறையினர் வெடி விபத்து நடந்த இடத்தில் ஆய்வு நடத்தினர். விழுப்புரம் தடயவியல் நிபுணர் சண்முகம், தடயங்களை சேகரித்தார். அந்த வழியாக வாகனப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பாலத்திற்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்து முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக