திருச்சி: முதல்வர் ஜெயலலிதா நினைத்திருந்தால், நான் அளித்த புகார் மீது
திருச்சி, அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., பரஞ்ஜோதி மீது டாக்டர் ராணி, தொடர்ந்த மோசடி வழக்கு விசாரணை, நேற்று ஜே.எம்., 4 நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் வேல்மயில் முன் நடந்தது. கடந்த வாய்தாவின் போதே, "அடுத்த விசாரணையின் போது, விசாரணை அதிகாரியான போலீஸ் உதவி கமிஷனர் ஜெயச்சந்திரன் கண்டிப்பாக ஆஜராக வேண்டும்' என, உத்தரவிட்டிருந்தார். ஆனால், நேற்று ஜெயச்சந்திரன் ஆஜராகவில்லை. அவர் வழக்கு விசாரணை தொடர்பாக உயர்நீதிமன்றம் சென்றிருப்பதாக, அரசு வக்கீல் மணிவண்ணன் தெரிவித்தார்.
இதற்கு டாக்டர் ராணி தரப்பு வக்கீல் தினகரன் கடும் ஆட்சேபம் தெரிவித்து, வழக்கு பதிவு செய்து வெகுநாட்களாகியும், இன்னும் குற்றப்பத்திரிகை பதிவு செய்யவில்லை. ஆளுங்கட்சி, எம்.எல்.ஏ., என்பதால், பரஞ்ஜோதிக்கு ஆதரவாக போலீசார் செயல்படுகின்றனர். மற்ற வழக்குகளிலும் இதேபோல் போலீசார் செயல்படுவார்களா? என்று கேள்வி எழுப்பி, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆனால், போலீஸ் உதவி கமிஷனர் ஜெயச்சந்திரன் வரவில்லை என்பதால், வழக்கு விசாரணையை வரும் மே, 30 க்கு மாஜிஸ்திரேட் ஒத்திவைத்தார். அதேபோல், டாக்டர் ராணியை வீடுபுகுந்து மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், வரும் மே, 3 ல், நீதிமன்றத்தில் ஆஜராகி, டாக்டர் ராணி பிரமாண வாக்குமூலம் அளிக்க வேண்டும் என, மாஜிஸ்திரேட் வேல்மயில் உத்தரவிட்டார்.
பின்னர் டாக்டர் ராணி நிருபர்களிடம் கூறியதாவது:
ஆளுங்கட்சி, எம்.எல்.ஏ., என்பதால் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தயங்குகின்றனர். எனக்கு நீதிமன்றத்துக்கு அலைவதே வேலையாக உள்ளது. நீதிமன்றம் அருகிலேயே ரூம் எடுத்து தங்கலாம் என்று கூட நினைக்கிறேன். நீதிமன்றமே, இவ்விஷயத்தில் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுகிறது. அப்படி என்றால், நியாயம் கிடைக்க நான் எங்கே போவது என தெரியவில்லை.
அரசியல் கட்சி தலைவர்கள், என் விஷயம் தொடர்பாக அறிக்கை விட நான் காரணமல்ல. அரசியல் கட்சிகள் அப்படித்தான் இருக்கும். அதற்கு நான் பொறுப்பல்ல. இரு கட்சியினரும் என்னை பலிகடா ஆக்கிவிட்டனர்.
நான் அளித்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, முதல்வர் ஜெயலலிதாவால், கருணாநிதியை பேச முடியாமல் செய்திருக்க முடியும். கருணாநிதியையோ, ஸ்டாலினையோ நான் நேரடியாக பார்த்தது கூட கிடையாது. அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., மீதான புகாருக்கு நடவடிக்கை இல்லை என்பதால், அவர்கள் அறிக்கை விடுகின்றனர்.
எனக்கு இன்னும் மிரட்டல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். இன்று (நேற்று) போலீஸார் உறுதி முடிவு தெரிவிக்காவிட்டால், நான் நீதிமன்ற வளாகத்திலேயே போராட்டம் நடத்தும் முடிவில் தான் வந்தேன். ஆனால், விசாரணை அதிகாரி, இந்த வழக்கை விட முக்கியத்துவம் வாய்ந்த வழக்குக்காக (நக்கலாக) உயர்நீதிமன்றம் சென்றுள்ளாராம். ஆகையால், அந்த முடிவை கைவிட்டேன்.
அடுத்த மாதம் நடக்கும் வழக்கு விசாரணைக்குள், உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யச் சொல்லி உத்தரவு பெற, வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார் dinamalar.com
உடனடியாக நடவடிக்கை எடுத்து, கருணாநிதியை பேச முடியாமல் செய்திருக்க முடியும்,'' என, எம்.எல்.ஏ., பரஞ்ஜோதி மீது வழக்கு தொடர்ந்துள்ள டாக்டர் ராணி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக