அமெரிக்க புரோகிராம் கேன்சல் நாடு திரும்பினார் அகிலேஷ்
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், இந்தி நடிகர் ஷாருக்கான் உள்பட பலரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில்
கடந்த 15&ம் தேதி மராத்தான் போட்டி நடந்தபோது 2 குண்டுகள் வெடித்தன. இதில் 3 பேர் இறந்தனர்.
170 பேர் காயம் அடைந்தனர். இதை தொடர்ந்து அமெரிக்காவில் பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கப்பட்டது.இந்நிலையில் உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், அமைச்சர் அசம் கான் ஆகியோர் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கும்பமேளா விழா தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க
சென்றனர். பாஸ்டன் விமான நிலையத்தில் அவர்கள் இருவரையும் அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர்.
இதற்கு அகிலேஷ் யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து, அங்குள்ள தாஜ் ஓட்டலில் தங்கிய அகிலேஷ், பாஸ்டனில் உள்ள இந்திய துணை தூதர் முலேயிடம் கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்தார். அமெரிக்காவில் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகளை உடனடியாக ரத்து செய்துவிட்டு அமைச்சருடன் விமானத்தில் நாடு திரும்பினார். உ.பி. முதல்வராக பதவியேற்ற பிறகு, அகிலேஷ் யாதவ்
முதல்முறையாக அமெரிக்கா சென்றது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க்: அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட உத்தர பிரதேச முதல்வர்
அகிலேஷ் யாதவ், அமைச்சர் அசம்கான் ஆகியோரிடம் பாஸ்டன் சர்வதேச விமான
நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இதனால்
அதிருப்தி அடைந்த அகிலேஷ் யாதவ், அமெரிக்காவில் பங்கேற்க இருந்த
நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு நாடு திரும்பினார்.
அமெரிக்காவில்
இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு வருகை தரும் பிற நாடுகளை சார்ந்த அரசியல் தலைவர்கள்,
விஐபிக்கள் உள்பட அனைவரும் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகிறார்கள். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், இந்தி நடிகர் ஷாருக்கான் உள்பட பலரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில்
கடந்த 15&ம் தேதி மராத்தான் போட்டி நடந்தபோது 2 குண்டுகள் வெடித்தன. இதில் 3 பேர் இறந்தனர்.
170 பேர் காயம் அடைந்தனர். இதை தொடர்ந்து அமெரிக்காவில் பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கப்பட்டது.இந்நிலையில் உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், அமைச்சர் அசம் கான் ஆகியோர் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கும்பமேளா விழா தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க
சென்றனர். பாஸ்டன் விமான நிலையத்தில் அவர்கள் இருவரையும் அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர்.
இதற்கு அகிலேஷ் யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து, அங்குள்ள தாஜ் ஓட்டலில் தங்கிய அகிலேஷ், பாஸ்டனில் உள்ள இந்திய துணை தூதர் முலேயிடம் கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்தார். அமெரிக்காவில் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகளை உடனடியாக ரத்து செய்துவிட்டு அமைச்சருடன் விமானத்தில் நாடு திரும்பினார். உ.பி. முதல்வராக பதவியேற்ற பிறகு, அகிலேஷ் யாதவ்
முதல்முறையாக அமெரிக்கா சென்றது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக