ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்களை, கற்பழித்த காமக் கொடூரனுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கோர்ட் தீர்ப்பளித்தது.
சேலம்
மாவட்டம், எடப்பாடியை சேர்ந்தவன் ஜெயசங்கர், 36. இவன், தமிழகம், கர்நாடகா
மாநிலத்தில், பல பெண்களை கற்பழித்து, கொலை செய்துள்ளான். ஓசூர் அடுத்த
உத்தனப்பள்ளியில், ஒரு பெண்ணை கற்பழித்து கொலை செய்தான்.
பேரண்டப்பள்ளியில்,
கேரளா பெண்ணை கற்பழித்து, கொலை செய்ய முயன்றான். கோவை போலீசார், இரண்டு
ஆண்டுக்கு முன், இவனை கைது செய்து, கோவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த
அழைத்து சென்றனர். அப்போது, அங்கிருந்து தப்பி சென்றான். கர்நாடகாவில்
தலைமறைவாக இருந்தான். அவனை, அந்த மாநில போலீசார், கைது செய்து, பெங்களூரு
சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி
மாவட்டம், பேரண்டப்பள்ளியில் நடந்த குற்ற வழக்கு, தொடர்பான விசாரணை, ஓசூர்
கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில், நீதிபதி ராமகிருஷ்ணன் நேற்று தீர்ப்பு
கூறினார். கற்பழித்து கொலை செய்ய முயன்ற ஜெய்சங்கருக்கு, பத்தாண்டு
கடுங்காவல் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு
கூறப்பட்டுள்ளது.
ஜெய்சங்கர் மீது உத்தனப்பள்ளியில், கற்பழித்து கொலை செய்த வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக