வெனிசுலா பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடையே மோதல்
வெனிசுலா
நாட்டில் சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் மறைந்த ஹியூகோ சாவேஸின்
ஆதரவாளர் நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெற்றார். வெறும் 1.5 சதவீத ஓட்டு
வித்தியாசத்தில் இவர் வென்றதால், எதிர்க்கட்சியினர் அவரது வெற்றியை
ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர்.ந்த
நிலையில் அங்கு பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள்
இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
எம்.பி.க்கள் சிலர் இதில் படுகாயம் அடைந்தனர்.சம்பவத்துக்கு
ஆளுங்கட்சிதான் காரணம் என எதிர்க்கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சியே
காரணம் என ஆளுங்கட்சியினரும் குற்றம் சாட்டினர். இது குறித்து
எதிர்க்கட்சி எம்.பி. ஜூலியா போர்கஸ் கூறும்போது, 'எங்களை அவர்கள்
(ஆளுங்கட்சியினர்) அடிக்கட்டும். சிறையில் போடட்டும். கொல்லட்டும். ஆனால்
நாங்கள் எங்கள் கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம்' என்றார். ஆனால்
சம்பவத்தின்போது முதலில் எதிர்க்கட்சி எம்.பி.க்களே பிரச்சி னையை
ஏற்படுத்தியதாக பாராளுமன்ற பணியாளர் ஒருவர் கூறியதாக செய்தி நிறுவனம் ஒன்று
கூறியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக