புதுடில்லி: "தொழில் அதிபர், முகேஷ் அம்பானிக்கு, "இசட்' பிரிவு பாதுகாப்பு
வழங்கப்பட்டது ஏன்' என, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் கேள்வி
எழுப்பியுள்ளது."ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தின், இயக்குனரான முகேஷ்
அம்பானிக்கு, சில மாதங்களுக்கு முன், பயங்கரவாதிகளிடமிருந்து, அச்சுறுத்தல்
வந்ததாக, தகவல் வெளியானது. இதையடுத்து, தனக்கு பாதுகாப்பு அளிக்கும்படி,
மத்திய அரசுக்கு, அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதை பரிசீலித்த, மத்திய உள்துறை அமைச்சகம், இரண்டு மாதங்களுக்கு முன், முகேஷ் அம்பானிக்கு, "இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்குவதற்கு அனுமதித்தது. இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:நாட்டில் உள்ள, சமானிய மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது முக்கியமா; தொழில் அதிபருக்கு, பாதுகாப்பு அளிப்பது முக்கியமா. தலைநகர் டில்லியில், ஐந்து வயது குழந்தை, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது. இந்த குழந்தைக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத அரசு, தொழில் அதிபருக்கு, எந்த அடிப்படையில் பாதுகாப்பு வழங்கியது.இவ்வாறு நீதிபதிகள், கேள்வி எழுப்பினர்.பொதுவாக, அரசியல் தலைவர்களுக்கு தரப்படும் பாதுகாப்பு போல இவருக்கு பாதுகாப்பு ஏன் என்ற கேள்விக்கு, "ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' வட்டாரங்கள் கூறுகையில், "தனக்கு பாதுகாப்பு அளிக்கும், வீரர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்துக்கான செலவு முழுவதையும், முகேஷ் அம்பானியே ஏற்றுள்ளார்' என்றன. சம்பளம் மட்டும்தான் செலவா ? அவர்களுக்கு உரிய கருவிகள் மற்றும் நிர்வாக செலவுகள் என்று எத்தனையோ இருக்கிறது , அவரது பந்தாக்களை தனது விலை உயர்ந்த அண்டில்லா மாளிகையில் மட்டும் வைத்துகொண்டால் நல்லது , பாது காப்பு அளிக்கும் வீரர்கள் ஒன்று கூலி பட்டாளம் இல்லைசார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக