பாமக நிறுவுனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டது தமிழக அரசின் பழிவாங்கும் போக்கையே காட்டுகிறது என்றும், அதற்காக தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்<’மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளை ஞர் பெருவிழாவில் பங்கேற்கச் சென்றவர்கள் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திட்டமிட்டு நடத்திய தாக்குதல் மற்றும் கலவரத்தில் அப்பாவி வன்னியர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டனர். இத்தாக்குதலில் ஏராளமான வன்னிய இளைஞர்கள் படுகாயமடைந்ததுடன், ஐநூறுக்கும் மேற்பட்ட வாகனங்களும் சேதப்படுத்தப் பட்டன.அப்பாவி வன்னியர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமது தலைமையில் ஏப்ரல் 30-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதியே பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். இந்தப் போராட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் அனுமதி அளித்திருந்தார். பின்னர், இப்போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து, தொடர்வண்டி நிலையம் அருகில் மாற்றிக் கொள்ளும்படி காவல்துறை தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. அதன்படி போராட்டமும் தொடர்வண்டி நிலையத்திற்கு அருகில் மாற்றப்பட்டது.
போராட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்ட நிலையில், திடீரென 29-ஆம் தேதி நள்ளிரவில் போராட்டத்திற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுவிட்டதாக காவல்துறையினர் தகவல் அனுப்பியிருக்கின்றனர். போராட்டத்திற்கு ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுவிட்ட நிலையில், சரியான காரணம் இல்லாமல் அனுமதியை காவல்துறையினர் ரத்து செய்தது உள்நோக்கம் கொண்டது.nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக