பாமக நிறுவனர் ராமதாஸ்
இன்று கைது செய்யப்பட்டு, 15 நாள் நீதிமன்றக்காவலில் வைக்கப்படுகிறார்.
காவல்துறையின் தடையை மீறி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால்
அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதையடுத்து
பாமகவினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
செஞ்சியில் 5 பேருந்துகளை அடித்து உடைத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த
செல்லாரில் பாமகவினர் மரங்களை வெட்டி சாலையி ல் போட்டு போக்குவரத்தை
ஸ்தம்பிக்க வைத்து ராமதாசை விடுதலை செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தி
வருகின்றனர். மேலும் செஞ்சியில்
சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.பாமக சட்டமன்ற
உறுப்பினர் காடுவெட்டி ஜெ.குரு சென்னையில் கைது செய்யப்பட்டார்.
திருவல்லிக் கேணியில் உள்ள சட்டமன்ற விடுதியில் ஜெ.குருவை கைது செய்தது
போலீஸ்.மாமல்லபுரம்
வன்னிய சித்திரை முழுநாள் இரவு விழாவில் அனுமதித்த நேரத்திற்கு மேலாக
பேசியதன் புகாரின் அடிப்படையில் போலீசார் இந்த கைது நடவடிக்கையை
எடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக