வெள்ளி, 3 மே, 2013

மு.க.முத்து குடும்பத்திற்கு கலைஞர் பஞ்சாயத்து. அறிவுநிதியால் முத்து அவதி ? இந்த முத்துவால் கலைஞருக்கு அவதி

சென்னை: தி.மு.க., தலைவர்
சமீபத்தில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மருமகள் சிவகாமசுந்தரி, ஒரு மனுவை கொடுத்தார். அந்த மனுவில், தன் மகன் அறிவுநிதி, தாங்கள் குடியிருந்து வந்த கோபாலபுரம் வீட்டை அபகரித்துக் கொண்டதாகவும், அந்த வீட்டின் வாடகை பணத்தை தராமல் இருப்பதாகவும், அதனால், தாங்கள் கஷ்டப்பட்டு வருவதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.

மேலும் அப்புகாரில் தனக்கும், தன் கணவர் முத்துவுக்கும் அச்சுறுத்தலும், மிரட்டலும் இருப்பதால், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, கேட்டிருந்தார். போலீஸ் அதிகாரிகளிடம் சிவகாமசுந்தரி மனு அளித்து விட்டு வந்ததும், முத்து சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், "என் மனைவி மறதிநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்; எங்கள் குடும்பம் விவகாரத்தில் யாரும் தலையிட வேண்டாம்' என, அவர் தெரிவித்திருந்தார்.
முத்து திடீரென இப்படியொரு அறிக்கை வெளியிடுவதற்கு, அவரது மகன் அறிவுநிதி குடும்பத்தினர் தான் காரணம் என, கூறப்படுகிறது. "மகன், தாய்க்கு செய்ய வேண்டிய கடமையை, நான் ஒழுங்காக செய்து வருகிறேன். ஆனால், என் தாயார் சுமத்திய குற்றச்சாட்டு குறித்து மன வேதனைப்படுகிறேன்' என, தனக்கு நெருக்கமானவர்களிடம் அறிவுநிதி கூறி வருத்தப்பட்டுள்ளார்.இதற்கிடையில், கடந்த 30ம் தேதி, ஒரு உதவி ஆணையர் தலைமையில், இரண்டு இன்ஸ்பெக்டர்கள், மு.க.முத்துவின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, புகார் மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு, மு.க.முத்து உறுதியாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அரசு வழக்கறிஞருடன் போலீசார் ஆலோசனை செய்தனர். காவல் உயர் அதிகாரிகளிடம் இருந்து, "சிக்னல்' கிடைத்தவுடன், வழக்கு பதிந்து, அறிவுநிதியை கைது செய்து சிறையில் அடைக்க, போலீசார் திட்டமிட்டனர். இந்த புகார் தொடர்பாக, கைது செய்யாமல் இருப்பதற்காக, அறிவுநிதி தரப்பு முன்ஜாமின் பெறவும் திட்டமிட்டது.
இந்த நிலையில், கோபாலபுரம் வீட்டிற்கு, முத்து, அவரது மனைவி சிவகாமசுந்தரி, மகன் அறிவுநிதி ஆகியோரை, தி.மு.க., தலைவர் கருணாநிதி அழைத்திருந்தார்.அவரது அழைப்பை ஏற்று, மூவரும் கருணாநிதியை சந்தித்தனர். மாத மாதம், தன் பெற்றோருக்கு அறிவுநிதி ஒரு குறிப்பிட்ட தொகையை குடும்பச் செலவுக்காக தர வேண்டும் என, கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவின்படி பணம் கொடுப்பதற்கு, அறிவுநிதி சம்மதம் தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் சமரச முயற்சியால், முத்து குடும்பத்தில் நிலவிய தகராறுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அறிவுநிதி மீது சுமத்தப்பட்ட புகாரை, விரைவில் சிவகாமசுந்தரி வாபஸ் பெறுவார் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
கருணாநிதி, தன் மூத்த மகன் மு.க.முத்து
குடும்பத்தில் ஏற்பட்டுள்ள தகராறு தொடர்பாக, விசாரணை நடத்தி, இரு தரப்பினர் மத்தியிலும் சமரசம் செய்து வைத்துள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: