மின்
கட்டண உயர்வை கண்டித்து, புதுச்சேரியில் சனிக்கிழமை அ.தி.மு.க.
சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முதல்-அமைச்சரும், அ.தி.மு.க.பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-விலைவாசி உயர்வுக்கு வித்திடும் வகையில் புதுச்சேரி மாநில அரசு அனைத்துப் பிரிவினருக்குமான மின் கட்டணத்தை 45 விழுக்காடு உயர்த்தி, மக்களை பெருத்த இன்னலுக்கு ஆளாக்கி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் வீடுகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் என அனைத்திற்குமான மின் கட்டணத்தை பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி அதிரடியாக புதுச்சேரி மாநில அரசு உயர்த்தி இருக்கிறது. இந்த மின் கட்டண உயர்வு காரணமாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள், விவசாயிகள், வர்த்தக நிறுவனங்கள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

தொழில்
மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தாங்கள் செய்யும் தொழிலுக்கான கட்டணங்களை
உயர்த்துவார்கள். தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருட்களின் விலைகளும்
கடுமையாக உயரக் கூடும்.
புதுச்சேரி
மாநில அரசின் நிர்வாகத் திறமையின்மையால் ஏற்கெனவே சீரழிந்து வரும்
மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை இந்த மின் கட்டண உயர்வு மேலும் சீரழிய
வழி வகுத்துள்ளது.
மின்
கட்டண உயர்வை அறிவித்துள்ள புதுச்சேரி மாநில அரசைக் கண்டித்தும், மின்
கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும்,
புதுச்சேரி மாநில அ.தி.மு.க. சார்பில் நாளை(4-ந்தேதி) காலை 10.45 அளவில்,
பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெறும்.
இந்தக்
கண்டன ஆர்ப்பாட்டம், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செம்மலை எம்.பி.
தலைமையிலும், புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் ஏ. அன்பழகன், எம்.எல்.ஏ.
முன்னிலையிலும் நடைபெறும்.
இவ்வாறு அறிக்கையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக